ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் புலாவ் சாப்பிட வேண்டுமா? வீட்டிலேயே செய்வது ஈசி தான்! இதோ சூப்பர் ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் புலாவ் சாப்பிட வேண்டுமா? வீட்டிலேயே செய்வது ஈசி தான்! இதோ சூப்பர் ரெசிபி!

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் புலாவ் சாப்பிட வேண்டுமா? வீட்டிலேயே செய்வது ஈசி தான்! இதோ சூப்பர் ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Published Jun 18, 2025 11:19 AM IST

பன்னீர் நறுமணத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. பன்னீர் வைத்து பல விதமான உணவுப் பொருட்களை செய்து சாப்பிடுவார்கள். இந்த வரிசையில் இன்று நாம் ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் பன்னீர் புலாவ் செய்வது எப்படி என இங்குத் தெரிந்துக்கொள்வோம்.

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் புலாவ் சாப்பிட வேண்டுமா? வீட்டிலேயே செய்வது ஈசி தான்! இதோ சூப்பர் ரெசிபி!
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் புலாவ் சாப்பிட வேண்டுமா? வீட்டிலேயே செய்வது ஈசி தான்! இதோ சூப்பர் ரெசிபி!

தேவையான பொருட்கள்

2 cup பாசுமதி அரிசி

1 cup பச்சை பட்டாணி

400 g பன்னீர்

3 தக்காளி

2 வெங்காயம்

3 பச்சை மிளகாய்

2 tsp தயிர்

1/4 tsp மஞ்சள் தூள்

2 tsp மிளகாய் தூள்

1 tsp மல்லி தூள்

1 tsp சீரக தூள்

1 tsp சீரகம்

2 tsp கரம் மசாலா

7 பல் பூண்டு

1 சிறுதுண்டு இஞ்சி

2 பிரியாணி இலை

3 ஏலக்காய்

2 இலவங்கப்பட்டை

7 கிராம்பு

1 நட்சத்திர சோம்பு

1 ஜாதிபத்ரி

தேவையான அளவு புதினா

தேவையான அளவு கொத்தமல்லி

தேவையான அளவு உப்பு

தேவையான அளவு நெய்

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு தண்ணீர்

செய்முறை

முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி அதை சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும். அடுத்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, மற்றும் பன்னீரை நறுக்கி, பச்சை பட்டாணியை உரித்து, மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பன்னீரை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், ஒரு மேஜைகரண்டி அளவு மிளகாய் தூள், ஒரு மேஜைகரண்டி அளவு கரம் மசாலா, மற்றும் ஒரு மேஜைகரண்டி அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை ஊற வைக்கவும். ஐந்து நிமிடத்திற்க்கு பிறகு ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ஒரு மேஜைகரண்டி அளவு நெய் சேர்த்து அதை சுட வைக்கவும். நெய் சுட்டதும் அதில் நம் ஊற வைத்திருக்கும் பன்னீர் துண்டுகளை ஒவ்வொன்றாக வைத்து வறுக்கவும். பின்பு சீரான இடைவெளியில் அவைகளை திருப்பி போட்டு எல்லா பக்கமும் நன்கு வறுத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ரெண்டு மேஜைகரண்டி அளவு நெய் மற்றும் ஒரு மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்து அதை சுட வைக்கவும். நெய் சுட்டதும் அதில் சீரகம், பிரியாணி இலை, ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு, நட்சத்திர சோம்பு, மற்றும் ஜாதிபத்ரியை சேர்த்து அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும். அரை நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு அதை நன்கு கிளறி விட்டு சுமார் ரெண்டு நிமிடம் வரை வதக்கவும். ரெண்டு நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் சேர்த்து அதை நன்கு கிளறி விடவும். பின்பு அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும். ஒரு நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.

அடுத்து அதில் ஒரு மேஜைகரண்டி அளவு மிளகாய் தூள், ஒரு மேஜைகரண்டி அளவு கரம் மசாலா, சீரக தூள், தயிர் மற்றும் உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். அதைத்தொடர்ந்து அதில் பச்சை பட்டாணியை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.

பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து அதை நன்கு கிளறி விடவும். இப்பொழுது நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் பன்னீரை அதில் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். அடுத்து நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை அதில் சேர்த்து அதை ஒரு கரண்டியின் மூலம் பக்குவமாக அரிசி உடைந்து விடாமல் நன்கு கிளறி விடவும். பின்பு அதில் சுமார் ரெண்டே கால் கப் அளவு தண்ணீர் சேர்த்து ஒரு மூடி போட்டு அதை சரியாக ஒரு விசில் வரும் வரை வேக விட்டு பின்பு அடுப்பை அணைத்து விட்டு அதை அப்படியே சுமார் பத்து நிமிடம் வரை வைக்கவும்.பத்து நிமிடத்திற்க்கு பிறகு மூடியை திறந்து உங்கள் அட்டகாசமான பீஸ் பன்னீர் புலாவை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.