Paneer Pizza: பார்த்தாலே நா ஊறும் பன்னீர் பீட்சா செய்யத்தெரியுமா? இதோ இப்பவே தெறிஞ்சுக்கலாம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Paneer Pizza: பார்த்தாலே நா ஊறும் பன்னீர் பீட்சா செய்யத்தெரியுமா? இதோ இப்பவே தெறிஞ்சுக்கலாம்!

Paneer Pizza: பார்த்தாலே நா ஊறும் பன்னீர் பீட்சா செய்யத்தெரியுமா? இதோ இப்பவே தெறிஞ்சுக்கலாம்!

Suguna Devi P HT Tamil
Jan 29, 2025 10:31 AM IST

Paneer Pizza: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிடித்தமான ஒரு அயல்நாட்டு உணவு தான் பீட்சா, இது இல்லாத ஊரே இல்லை என்று ஆகி விட்டது. இந்த பீட்சா செய்வது கடினம் என நினைக்கிறோம். ஆனால் நாமே எளிதாக இதனை செய்யலாம். வீட்டிலேயே சுவையான பன்னீர் பீட்சா செய்வது என இங்கு பார்ப்போம்.

Paneer Pizza: பார்த்தாலே நா ஊறும் பன்னீர் பீட்சா செய்யத்தெரியுமா? இதோ இப்பவே தெறிஞ்சுக்கலாம்!
Paneer Pizza: பார்த்தாலே நா ஊறும் பன்னீர் பீட்சா செய்யத்தெரியுமா? இதோ இப்பவே தெறிஞ்சுக்கலாம்! (Rich Pizza)

தேவையான பொருள்கள்

ஒரு பீட்சா பேஸ்

ஒரு கப் பன்னீர்

50 கிராம் சீஸ்

2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய்

2 பெரிய வெங்காயம் 

1 தக்காளி

2 டேபிள்ஸ்பூன் தக்காளி சாஸ் 

தேவையான அளவு உப்பு 

ஒரு டீஸ்பூன் மிளகுத் தூள் 

4 முதல் 5 வற மிளகாய் 

செய்முறை

முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சீஸை நன்கு துருவிக் கொள்ளவும்.  இதற்கு நாம்  கடைகளில் கிடைக்கும் சீஸ் ஸ்லைஸைப் பயன்படுத்தலாம். இன்னும் நன்றாக இருக்கும் . மற்ற தேவையான பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளவும். பன்னீரைச் சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வற மிளகாயிலுள்ள விதைகளை தனியாக எடுத்துக் கொண்டு மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும். முதலில் அடுப்பில் பேனை வைத்து அடிக்கில்  வெண்ணெய் ஊற்றி உருக விடவும். வெண்ணெய் உருக்கியதும்  அதில் பன்னீரைப் போட்டு லேசாகப் பொரித்தெடுக்கவும். 

பின்னர் பீட்சா பேஸில் வெண்ணெயைத் தடவிக் கொள்ள வேண்டும். பின்னர் இதன்  மேலே தக்காளி சாஸை நன்றாகத் தடவி விட வேண்டும். பிறகு நறுக்கிய வெங்காயத்தை பரவலாக வைக்க வேண்டும். வெங்காயத்திற்கு மேல் தக்காளியைப் பரவலாக வைக்கவும். அதன் பிறகு பொரித்த பன்னீரைப் பரவலாக வைத்து, அதன் மேல் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத் தூளைத் தூவி, அரைத்து வைத்துள்ள மிளகாயைத் தூவவும். இப்பொழுது அதன் மீது துருவி வைத்துள்ள சீஸைத் தூவவும். கடைசியாக இந்த கலவவையை மைக்ரோவேவ் அவனில் 200 டிகிரியில் 15 நிமிடங்கள் வைத்தெடுக்கவும். சுவையான பன்னீர் பீட்சா ரெடி. வீட்டிலேயே செய்த பீட்சா என்பதால் வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடலாம். குழந்தைகளும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள் . இது போன்று வித்தியாசமான உணவுகளை செய்து தரும் போது வீட்டில் இருக்கும் குழந்தைகள் மகிழ்வார்கள். அதிலும் வெளியே கடைகளில் வாங்கும் உணவுகளை விட வீட்டில் செய்யும் உணவுக்குதான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.