மழை வரும் பொழுது சூடான சிற்றுண்டி சாப்பிட வேண்டுமா? அப்போ இந்த பாலக்கீரை பக்கோடா ட்ரை பண்ணி பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மழை வரும் பொழுது சூடான சிற்றுண்டி சாப்பிட வேண்டுமா? அப்போ இந்த பாலக்கீரை பக்கோடா ட்ரை பண்ணி பாருங்கள்!

மழை வரும் பொழுது சூடான சிற்றுண்டி சாப்பிட வேண்டுமா? அப்போ இந்த பாலக்கீரை பக்கோடா ட்ரை பண்ணி பாருங்கள்!

Suguna Devi P HT Tamil
Published Jun 16, 2025 01:04 PM IST

நாம் வீட்டிலேயே விதவிதமான சிற்றுண்டிகளை சாப்பிட வேண்டும். அதிலும் தற்போது நிலவும் மழைக்காலத்திற்கு ஏற்ற சுவையான சிற்றுண்டிகளை வீட்டிலேயே செய்யலாம். அதற்கு தான் பாலக்கீரை பக்கோடா ஒரு சிறந்த தேர்வாகும். வீட்டிலேயே பாலக்கீரை பக்கோடா எப்படி செய்வது என்பதை இங்கே அறிந்துக் கொள்ளுங்கள்.

மழை வரும் பொழுது சூடான சிற்றுண்டி சாப்பிட வேண்டுமா? அப்போ இந்த பாலக்கீரை பக்கோடா ட்ரை பண்ணி பாருங்கள்!
மழை வரும் பொழுது சூடான சிற்றுண்டி சாப்பிட வேண்டுமா? அப்போ இந்த பாலக்கீரை பக்கோடா ட்ரை பண்ணி பாருங்கள்!

தேவையான பொருட்கள்

1 கட்டு பாலக் கீரை

1/2 cup அரிசி மாவு

1 cup கடலை மாவு

2 வெங்காயம்

2 பச்சை மிளகாய்

1/2 tsp மஞ்சள் தூள்

1 tsp மிளகாய் தூள்

1 tsp ஓம விதைகள்

1/2 tsp பெருங்காய தூள்

1 சிறு துண்டு இஞ்சி

தேவையான அளவு உப்பு

தேவையான அளவு கருவேப்பிலை

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு தண்ணீர்

செய்முறை

முதலில் பாலக் கீரை, வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் இஞ்சியை நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு bowl லை எடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பாலக் கீரை, வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் இஞ்சியை போட்டு நன்கு கிளறி விடவும். பின்பு அதில் அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், ஓம விதைகள், பெருங்காய தூள் மற்றும் 1 tsp அளவு உப்பை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும். இப்பொழுது ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 tsp அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

எண்ணெய் சுட்டவுடன் அடுப்பை அணைத்து விட்டு அதை நாம் செய்து வைத்திருக்கும் கலவையில் ஊற்றி ஒரு கரண்டியின் மூலம் நன்கு கிளறி விடவும். அடுத்து அதில் ஒரு கையளவு தண்ணீர் தெளித்து நம் கைகளின் மூலம் அதை நன்கு கிளறி விடவும். இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பக்கோடாவை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும். எண்ணெய் சுட்டதை உறுதி செய்த பின் அதில் நாம் செய்து வைத்திருக்கும் பக்கோடா மாவில் இருந்து கொஞ்சமாக எடுத்து அதை கவனமாக எண்ணெயில் உதிர்த்து விட்டு அது ஒருபுறம் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.ஒருபுறம் பொன்னிறமானதும் அதை மறுபுறம் ஒரு கரண்டியின் மூலம் திருப்பிவிட்டு அந்தப் புறமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

கடைசியாக கருவேப்பிலையை உருவி அந்தப் பக்கோடாவுடன் போட்டு பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் உங்கள் அட்டகாசமான பாலக் கீரை பக்கோடா ரெடி. அதை சுட சுட எடுத்து ஒரு தட்டில் வைத்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.