வெண்டைக்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிட வைக்கும் இந்த வெண்டைக்காய் சப்ஜி! நார்த் இந்தியன் ஸ்டைல் ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வெண்டைக்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிட வைக்கும் இந்த வெண்டைக்காய் சப்ஜி! நார்த் இந்தியன் ஸ்டைல் ரெசிபி!

வெண்டைக்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிட வைக்கும் இந்த வெண்டைக்காய் சப்ஜி! நார்த் இந்தியன் ஸ்டைல் ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Published Apr 30, 2025 01:16 PM IST

நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளில் ஒன்றாக வெண்டைக்காய் இருந்து வருகிறது. ஆனால் சிலருக்கு இதன் வழுவழு தன்மை பிடிப்பதில்லை. இதனை சரிசெய்ய சில வித்தியாசமான முறைகளில் சமைக்க வேண்டும். அதற்கு நார்த் இந்தியன் ஸ்டைல் வெண்டைக்காய் சப்ஜி செய்வது எப்படி என தெரிந்துக் கொள்வோம்.

வெண்டைக்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிட வைக்கும் இந்த வெண்டைக்காய் சப்ஜி! நார்த் இந்தியன் ஸ்டைல் ரெசிபி!
வெண்டைக்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிட வைக்கும் இந்த வெண்டைக்காய் சப்ஜி! நார்த் இந்தியன் ஸ்டைல் ரெசிபி!

தேவையான பொருட்கள்

அரை கப் வெண்டைக்காய்

கால் கப் எண்ணெய்

2 பெரிய வெங்காயம்

1 டீஸ்பூன் சீரகம்

கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள்

4 முதல் 6 பச்சை மிளகாய்

ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

கால் கப் அரைத்த தக்காளி விழுது

தேவையான அளவு உப்பு

கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்

2 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்

1 டீஸ்பூன் சீரக தூள்

2 டீஸ்பூன் மல்லித் தூள்

கால் கப் தண்ணீர்

1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்

1 டீஸ்பூன் ஆம்சூர் தூள்

செய்முறை

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து நன்கு காயவிட வேண்டும். எண்ணெய் காயந்த பின்னர் அதில் நறுக்கிய ஒரு வெங்காயம் மற்றும் வெண்டைக்காயை தனித்தனியாக வதக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும். அடுத்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி விட்டு, தக்காளி விழுது சேர்த்து கலந்து விடவும்.

பிறகு உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள்,தனியா தூள் ஆகியவற்றை சேர்த்து கலந்து விடவும். அடுத்து தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். இப்பொழுது இதில் வதக்கிய வெண்டைக்காயை சேர்த்து கலந்து விட்டு 5 நிமிடம் வேகவிட வேண்டும். பின்னர் கரம் மசாலா தூள், ஆம்சூர் தூள், வறுத்த வெங்காயம் சேர்த்து கலந்து விட்டு 3 நிமிடம் வேகவிடவும். இப்பொழுது சுவையான வெண்டைக்காய் சப்ஜி தயார். இதனை நீங்களும் உங்களது வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். வெண்டைக்காய் பிடிக்காதவர்களும் இப்படி செய்து தரும் போது விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் சூடான சாதம், சப்பாத்தி என பல வற்றுடன் இதனை வைத்து சாப்பிடலாம்.