உடலை முறுக்கேற்றும் மசாலா பால்! வீட்டிலேயே செய்யலாம்! ஈசி ரெசிபிய தெரிஞ்சுக்க இத படிங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உடலை முறுக்கேற்றும் மசாலா பால்! வீட்டிலேயே செய்யலாம்! ஈசி ரெசிபிய தெரிஞ்சுக்க இத படிங்க!

உடலை முறுக்கேற்றும் மசாலா பால்! வீட்டிலேயே செய்யலாம்! ஈசி ரெசிபிய தெரிஞ்சுக்க இத படிங்க!

Suguna Devi P HT Tamil
Published Oct 23, 2024 04:14 PM IST

மசாலா பால் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இது மாலை நேரங்களில் தேநீர் மற்றும் காபிக்கு மாற்றாக அருந்தக் கூடிய பானமாக இருக்கிறது.

உடலை முறுக்கேற்றும் மசாலா பால்! வீட்டிலேயே செய்யலாம்! ஈசி ரெசிபிய தெரிஞ்சுக்க இத படிங்க!
உடலை முறுக்கேற்றும் மசாலா பால்! வீட்டிலேயே செய்யலாம்! ஈசி ரெசிபிய தெரிஞ்சுக்க இத படிங்க! (Awesome Cuisine)

தேவையான பொருட்கள்

1 கப் பால் 

கால் கப் சர்க்கரை

15 முந்திரி

15 பாதாம்

10 பிஸ்தா

2 டேபிள்ஸ்பூன்  சாரை பருப்பு

அரை டேபிள்ஸ்பூன் குங்குமப்பூ

கால் டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள்

சிறிதளவு இஞ்சி

2 துண்டு பட்டை

3 ஏலக்காய்

4 கிராம்பு

செய்முறை

முதலில்  பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அதை கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும் அடுப்பிலிருந்து கீழே இறக்கி அதில் முந்திரி மற்றும் பாதாமை போட்டு அதை ஊற விடவும். அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றி அதனுடன் பட்டை, ஏலக்காய், மற்றும் கிராம்பு சேர்த்து அதை சுட வைக்கவும். பாலை அவ்வப்போது கிண்டி விடவும். பாலை எவ்வளவுக்கு எவ்வளவு நாம் வற்ற வைக்கிறோமோ அந்த அளவிற்கு மசாலா பாலின் சுவை நன்றாக இருக்கும். பால் வெது வெதுப்பான பதத்திற்கு வந்ததும் அதில் ஒரு துண்டு இஞ்சியை தட்டி போட்டு அதை நன்கு கலந்து விடவும். இப்பொழுது இந்த பாலில் கால் டேபிள்ஸ்பூன் அளவு மஞ்சள் தூள் சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு பாலை வற்ற விடவும்.

பின்னர்  ஊற வைத்திருக்கும் முந்திரி மற்றும் பாதாமை எடுத்து அதன் தோலை உரித்து ஒரு மிக்ஸியில் போட்டு அதனுடன் காய்ச்சிய பாலில் இருந்து 4 டேபிள்ஸ்பூன்  பாலை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர் இந்த பேஸ்டை மீதியுள்ள பாலில் சேர்த்து நன்கு கலந்து விட்டு அதை கொதிக்க விடவும். சிறிது நேரத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு சர்க்கரையை சேர்த்து அதை நன்கு கரையும் வரை கிண்டி விடவும். அடுத்து இந்த பாலை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.  பின்பு இந்த பாலில் அரை டேபிள்ஸ்பூன் அளவு குங்குமப்பூவை சேர்த்து அதை நன்கு கலக்கவும். அடுத்து அதை அப்படியே அடுப்பில் வைத்து நன்கு ஆடை வரும் வரை கொதிக்க விடவும்.  ஆடை வந்ததும் மசாலா பாலை சுட சுட ஆடையோடு எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றி அதில் நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா, மற்றும் சாரை பருப்பை சேர்த்து நன்கு கலக்கி பரிமாறவும். இப்பொழுது சுடான, மிகவும் சுவையான, மற்றும் உடம்பிற்கு இதமான மசாலா பால் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.