Mutton Soup: இனி யார் வேணாலும் சூப்பரா சூப் செய்யலாம்! காரசாரமான மட்டன் சூப் செய்வது எப்படி? பக்கா ரெசிபி!
Mutton Soup: முன்னதாகவே மட்டன் சமைக்கத் தெரிந்தவர்களிடம் கேட்டு சமைக்கலாம். அப்படி கேட்பதற்கு யாரும் இல்லையா? இதோ அசத்தலான மட்டன் சூப் செய்வது எப்படி என்பதை இங்கே கொடுத்துள்ளோம். இதனை முழுமையாக படித்து பார்த்து உங்கள் வீட்டில் சூப் செய்து கொடுத்து அசத்துங்கள்.

நம்மில் பலருக்கு சிக்கன் சமைப்பது என்றால் மிகவும் எளிதான காரியமாக இருக்கலாம். ஆனால் அது மட்டன் என வரும் போது நாம் சற்று தடுமாறவும் செய்வோம். ஏனென்றால் மட்டனை வேக வைக்கும் போது சரியான பதம் தெரிய வேண்டும். இல்லையென்றால் அது சரியாக வேகாது அல்லது அதிகமாக வெந்து தடிமனாகி விடும். இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க முன்னதாகவே மட்டன் சமைக்கத் தெரிந்தவர்களிடம் கேட்டு சமைக்கலாம். அப்படி கேட்பதற்கு யாரும் இல்லையா? இதோ அசத்தலான மட்டன் சூப் செய்வது எப்படி என்பதை இங்கே கொடுத்துள்ளோம். இதனை முழுமையாக படித்து பார்த்து உங்கள் வீட்டில் சூப் செய்து கொடுத்து அசத்துங்கள்.
தேவையான பொருள்கள்
கால் கிலோ மட்டன்
ஒரு பெரிய வெங்காயம்
ஒரு பெரிய தக்காளி
4 பச்சை மிளகாய்
2 டீஸ்பூன் இஞ்சி- பூண்டு விழுது
ஒரு தேக்கரண்டி மிளகு தூள்
1 டீஸ்பூன் சீரக தூள்
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
டீஸ்பூன் சோம்பு தூள்
15 பாதாம் பருப்பு -
சிறிய துண்டு பட்டை
3 முதல் 5 கிராம்பு
2 ஏலக்காய்
ஒரு கைப்பிடி அளவு புதினா
ஒரு கைப்பிடி அளவு மல்லித் தழை
தேவையான அளவு உப்பு
தாளிக்க தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
முதலில் பாதாம் பருப்பை ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஊறவைத்த பாதாமை தோல் உரித்து ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் நீளமாக வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். தக்காளியை துண்டுகளாகவும் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும். மல்லி, புதினாவை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இப்பொழுது பிரசர் குக்கரில் மட்டனை சுத்தம் செய்து போட்டு மேலும் அதில் இஞ்சி பூண்டு விழுது, மிளகு தூள், சீரக தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விட வேண்டும்.
குறைந்தது 7 முதல் 9 விசில் விட வேண்டும். ஆட்டுக்கறியை வாங்கும் போதே நல்ல இளம் ஆட்டுக்கறியாக வாங்க வேண்டும். அப்போது தான் கறி நன்றாக வேகும். விசில் வந்து முடிந்ததும் தம் போனவுடன் மட்டுமே குக்கரை திறக்க வேண்டும். மட்டன் நன்றாக வெந்ததை உறுதிபடுத்தி விட்டு அதில் அரைத்த பாதாமை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைதிக்கது அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை போட்டு வதக்கி விட வேண்டும். பின்னர் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, புதினா, மல்லித் தழை சேர்த்து தாளிக்க வேண்டும். சூப்பில் தாளித்தவற்றை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். சூடான கமகமக்கும் மட்டன் சூப் தயார். நீங்களும் இதனை உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பார்த்து சாப்பிடுங்கள்.

டாபிக்ஸ்