Mung Bean Idly: சட்டுனு செய்யலாம் பாசிப்பயறு இட்லி! காலை உணவிற்கு இது தான் பெஸ்ட்! சுவையான ரெசிபி இதோ!
Mung Bean Idly: பயிறு வகைகளை அவித்து சாப்பிட வேண்டும். இவ்வாறு பயிறுகளை சாப்பிடுவதும் சிலருக்கு சளிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் பாசிப் பயறை வைத்து சுவையான இட்லி செய்யலாம். காலை நேரத்திற்கு இந்த இட்லி சரியான தேர்வாக இருக்கும். இந்த சுவையான இட்லி செய்யும் முறையை இங்கு காண்போம்.

காலை நேரத்தில் ராஜா போல சாப்பிட வேண்டும் எனக் கூறுவார்கள். அதற்கு அத்தனை விதமான சத்துக்களையும் சேர்த்த உணவு எனப் பொருள் உண்டு. ஆனால் நாம் காலையில் வழக்கமான இட்லி, தோசை என மட்டுமே சாப்பிட்டு வருகிறோம். ஆனால் பயறு வகைகளை காலை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரவு நேரமே பயறு வகைகளை ஊற வைத்து காலையில் இருந்து அவித்து சாப்பிட வேண்டும். இவ்வாறு பயிறுகளை சாப்பிடுவதும் சிலருக்கு சளிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் பாசிப் பயறை வைத்து சுவையான இட்லி செய்யலாம். காலை நேரத்திற்கு இந்த இட்லி சரியான தேர்வாக இருக்கும். இந்த சுவையான இட்லி செய்யும் முறையை இங்கு காண்போம்.
தேவையான பொருள்கள்
அரை கப் பாசிப்பயறு
ஒரு கைப்பிடி அளவு கடலைப்பருப்பு
ஒரு கைப்பிடி அளவு உளுத்தம் பருப்பு
ஒரு கைப்பிடி புழுங்கல் அரிசி
1 பெரிய வெங்காயம்
ஒரு பச்சை மிளகாய்
மல்லித்தழை சிறிதளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை
முதலில் இட்லி செய்வதற்கு பாசிப்பயிறு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் புழுங்கல் அரிசி ஆகிய அனைத்தையும் ஒன்றாக ஒரு அகன்ற பாத்திரத்தில் போட வேண்டும். அவை அனைத்தும் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி ஊற வைக்க வேண்டும். இரவில் ஊற வைத்து பகலில் இதை செய்ய வேண்டும். அல்லது குறைந்தபட்சம் 7 அல்லது 8 மணி நேரமாவது இந்த பயிறுகள் அனைத்தையும் ஊற வைக்க வேண்டும். பின்னர் நன்கு ஊறியதும் இவை அனைத்தையும் சிறிதளவு தண்ணீரை வடிகட்டி விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைக்க வேண்டும்.
தண்ணீர் இல்லை என்றால் சிறிதளவு ஊற்றவும். இட்லி மாவு பதத்திற்கு வருமாறு மாவை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கி போட வேண்டும். மேலும் கொத்தமல்லி தழையையும் சிறிதளவு எடுத்துக்கொண்டு பொடிப் பொடியாக நறுக்கி இதில் போட வேண்டும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து மாவை தயார் செய்து கொள்ள வேண்டும். இப்பொழுது இட்லி கடாயை ஒரு அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் தண்ணீர் ஊற்றி சூடானதும் இட்லி தட்டில் இட்லிகளை ஒவ்வொன்றாக ஊற்றவும். 15 முதல் 20 நிமிடங்கள் இட்லியில் நன்றாக வெந்த பின்பு இட்லியை எடுத்து வைக்கவும் சுவையான மற்றும் சூடான பாசிப்பயறு இட்லி ரெடி. இந்த இட்லியில் அணைத்து விதமான சத்துக்களும் கிடைக்கின்றன. இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அணைத்து வயதினரும் தாராளமாக சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த இட்லி ஒரு சிறப்பான காலை உணவாக அமையும்.
இந்த இட்லிக்கு பூண்டு அல்லது தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். சாம்பார் வைத்தும் இதனை சாப்பிடலாம். நீங்களும் இது போன்ற சத்தான உணவுகளை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள். அனைவருக்கும் இது போன்ற வித்தியாச உணவுகள் மிகவும் பிடிக்கும்.

டாபிக்ஸ்