உடலுக்கு எதிர்ப்பு சக்தி வேண்டுமா? அப்போ இந்த முருங்கைக் கீரை அடை சாப்பிடுங்கள்! இதோ எளிமையான ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உடலுக்கு எதிர்ப்பு சக்தி வேண்டுமா? அப்போ இந்த முருங்கைக் கீரை அடை சாப்பிடுங்கள்! இதோ எளிமையான ரெசிபி!

உடலுக்கு எதிர்ப்பு சக்தி வேண்டுமா? அப்போ இந்த முருங்கைக் கீரை அடை சாப்பிடுங்கள்! இதோ எளிமையான ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Published Jun 17, 2025 10:29 AM IST

நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியதாகவும், பல பலன்களை அளிக்கக்கூடியதாகவும் இருக்கும் கீரையில் இருந்து சுவையான சமையல் செய்யலாம். அதில் முருங்கைக்கீரை அடை எப்படி செய்வது என்பதை இங்கு பார்ப்போம்.

உடலுக்கு எதிர்ப்பு சக்தி வேண்டுமா? அப்போ இந்த முருங்கைக் கீரை அடை சாப்பிடுங்கள்! இதோ எளிமையான ரெசிபி!
உடலுக்கு எதிர்ப்பு சக்தி வேண்டுமா? அப்போ இந்த முருங்கைக் கீரை அடை சாப்பிடுங்கள்! இதோ எளிமையான ரெசிபி!

நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியதாகவும், பல பலன்களை அளிக்கக்கூடியதாகவும் இருக்கும் கீரையில் இருந்து சுவையான சமையல் செய்யலாம். அதில் முருங்கைக்கீரை அடை எப்படி செய்வது என்பதை இங்கு பார்ப்போம்.

முருங்கைக்கீரை அடை

தேவையான பொருட்கள

இரண்டு காட்டு முருங்கைக்கீரை

அரை கப் துவரம்பருப்பு

அரை கப் கடலைப்பருப்பு

ஒரு டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பு

கால் கப் பச்சரிசி

கால் கப் புழுங்கலரிசி

கால் கப் தேங்காய் துருவல்

6 வற மிளகாய்

தேவையான அளவு உப்பு

தேவையான அளவு எண்ணெய்

அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள்

செய்முறை

முதலில் ஒரு முருங்கைக் கீரை இலைகளை நன்றாக ஆய்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு அகன்ற பாத்திரத்தில் துவரம் பருப்பு கடலை பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும். பின்னர் இதில் அரிசி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குறைந்தது ஒரு மணி முதல் அதிகபட்சம் இரண்டு மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெயை ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் முருங்கைக் கீரையை போட்டு மிதமாக வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் நாம் ஊற வைத்துள்ள பருப்பு, அரிசி மற்றும் மிளகாய் கலவையுடன் பெருங்காயம், உப்பு , துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் போட்டு இவை அனைத்தையும் நைசாக இல்லாமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நாம் அரைத்த மாவுடன் வதக்கி வைத்துள்ள முருங்கைக் கீரையையும் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது அடை சுடுவதற்கான மாவு ரெடி. ஒரு தோசை சட்டியை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் மாவை சிறிது சிறிதாக ஊற்ற வேண்டும். நன்றாக வேகும் வரை காத்திருக்கவும். அடை மிகவும் தடிமனாக இருந்தால் இரு பக்கமும் வேக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். மேலும் முருங்கைக் கீரை சாப்பிடுவதால் சிலருக்கு வயிற்று தொந்தரவு ஏற்படும். நாம் இதில் முருங்கைக்கீரை வதக்கி சேர்ப்பதால் வயிற்று தொந்தரவும் ஏற்படாது. இரண்டு பக்கமும் அடை வெந்தவுடன் எடுத்து சூடான இஞ்சி சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இது காலை வேளையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடுவதற்கு ஏற்ற சத்தான உணவாகும்.