பச்சைப்பயறு பராத்தா சாப்பிட்டு இருக்கீங்களா? வித்தியாசமான உணவிற்கு இதை ட்ரை பண்ணி பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பச்சைப்பயறு பராத்தா சாப்பிட்டு இருக்கீங்களா? வித்தியாசமான உணவிற்கு இதை ட்ரை பண்ணி பாருங்க!

பச்சைப்பயறு பராத்தா சாப்பிட்டு இருக்கீங்களா? வித்தியாசமான உணவிற்கு இதை ட்ரை பண்ணி பாருங்க!

Suguna Devi P HT Tamil
Published Jun 04, 2025 01:27 PM IST

பாசிப்பயறை குழம்பாக வைத்துக் கொடுத்தால் பலர் நன்றாக சாப்பிடுவாதில்லை. எனவே வித்தியாசமான முறையில் பாசிப்பயறு வைத்து பாராத்தா செய்து கொடுக்கலாம். இது சாப்பிடுவதற்கும் அருமையான சுவையுடன் இருக்கும். இன்று இந்த பாசிப்பயறு பாராத்தாவை செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.

பச்சைப்பயறு பராத்தா சாப்பிட்டு இருக்கீங்களா? வித்தியாசமான உணவிற்கு இதை ட்ரை பண்ணி பாருங்க!
பச்சைப்பயறு பராத்தா சாப்பிட்டு இருக்கீங்களா? வித்தியாசமான உணவிற்கு இதை ட்ரை பண்ணி பாருங்க!

தேவையான பொருட்கள்:

பச்சை பயறு - 1/2 கப்

கோதுமை மாவு - 1 கப்

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

உப்பு - தேவைக்கேற்ப

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

இஞ்சி - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 1 (விரும்பினால்)

தனியா, சீரகம் - தேவைக்கேற்ப (விரும்பினால்)

செய்முறை:

முதலில் பச்சை பயறை ஒரு பாத்திரத்தில் போட்டு, நன்கு கழுவி, 2 முதல் 3 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் ஊற வைத்த பச்சை பயறை வேகவைத்து, மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு அகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, மஞ்சள் தூள், வெந்தயம், இஞ்சி, பச்சை மிளகாய், தனியா, சீரகம் (விரும்பினால்) ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். மசித்த பச்சை பயறை மாவில் சேர்த்து, நன்கு பிசறி, மாவை மென்மையாக வைக்கவும்.

இப்பொழுது மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். இந்த அளவில் மாவை எடுத்தால் 10 முதல் 15 உருண்டைகள் வரலாம். இப்போது உருட்டி தேய்த்த மாவினை தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, பரத்தி, இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

குறிப்பு: பச்சை பயறை வேகவைக்கும் போது, அதிகப்படியான தண்ணீர் சேர்க்காமல், மசியும் அளவுக்கு மட்டுமே தண்ணீர் சேர்க்கவும். பராத்தா மாவை மென்மையாக பிசறி, சிறிது நேரம் ஊறவைத்தால், பராத்தா மென்மையாக இருக்கும். விரும்பினால், பராத்தா மாவில் வெங்காயம், முட்டை, பூண்டு போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.