Millet Dosa: நலம் தரும் நவ தானிய தோசை! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும்! இதோ ஈசி ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Millet Dosa: நலம் தரும் நவ தானிய தோசை! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும்! இதோ ஈசி ரெசிபி!

Millet Dosa: நலம் தரும் நவ தானிய தோசை! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும்! இதோ ஈசி ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Published Feb 23, 2025 10:07 AM IST

Millet Dosa: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட உகந்த ஒரு உணவு ரெசிபியைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம். நவ தானியங்களை வைத்து சுவையான மற்றும் சூடான தோசை செய்வது எப்படி என்பதை இங்கு கொடுத்துள்ளோம். இதனை பின்பற்றி நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

Millet Doasa: நலம் தரும் நவ தானிய தோசை! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும்! இதோ ஈசி ரெசிபி!
Millet Doasa: நலம் தரும் நவ தானிய தோசை! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும்! இதோ ஈசி ரெசிபி! (Canva)

தேவையான பொருட்கள் 

கால் கப் பாசிப்பயறு

 கால் கப் கருப்பு உளுத்தம்பருப்பு 

 கால் கப் கொண்டைக்கடலை 

கால் கப் பச்சரிசி

கால் கப் துவரம்பருப்பு 

 கால் கப் கொள்ளு 

கால் கப் சோயா

கால் கப் வெள்ளை சோளம் 

ஒரு டேபிள்ஸ்பூன்  எள்ளு  

4 பச்சை மிளகாய்

6 காய்ந்த மிளகாய்  

ஒரு துண்டு இஞ்சி 

துருவிய தேங்காய் 

ஒரு கொத்து கறிவேப்பிலை 

ஒரு கொத்து கொத்தமல்லி தழை 

அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் 

தேவையான அளவு உப்பு 

தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

நவதானிய தோசை செய்வதற்கு முதலில் நவதானியங்களை ஊற வைக்க வேண்டும். அதற்கு ஒரு அகன்ற பாத்திரத்தை எடுத்து அதில் பாசிப்பயிறு, உளுத்தம் பருப்பு, கொண்டைக்கடலை பச்சரிசி, துவரம் பருப்பு, கொள்ளு மற்றும் சோயா ஆகியவற்றை சேர்க்க வேண்டும். மேலும் இதில் வெள்ளை சோளம் சேர்த்துக் கொள்ளலாம். கூடுதலாக எள் சேர்த்துக் கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.  பாத்திரத்தில் உள்ள அனைத்தும் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.  இதனை குறைந்த பட்சம் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் அல்லது முந்தைய நாள் இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் எடுத்து செய்யலாம். 

நன்றாக ஊறிய பிறகு ஒரு பெரிய மிக்சி ஜாரில்  தானியங்களை சேர்க்க வேண்டும். மேலும் இதில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், வற மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம் மற்றும்  உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் பொடியாக நறுக்கிய கொத்துமல்லி தழையை சேர்த்து மாவை தயார் செய்துக் கொள்ள வேண்டும். இதனை ஒரு மணி நேரம் புளிக்க விட வேண்டும். இப்போது ஒரு தோசை கல் மீது எண்ணெய் ஊற்றி அதில் மெல்லிய தோசைகளாக ஊற்றி எடுக்கவும். இஞ்சி சேர்ப்பதால் எளிதில் ஜீரணமாகும். இது குழந்தைகளுக்கு சிறந்த காலை உணவாகும். இதனை சாப்பிட்டு செல்வதால் காலை நேரத்தில் ஆற்றலுடன் இயங்க உதவுகிறது. நீங்களும் இதனை உங்களது வீட்டில் செய்து பார்த்து மகிழுங்கள்.