தித்திக்கும் பால் கொழுக்கட்டை செய்யத் தெரியுமா? சுவையாக சாப்பிடலாம்! இதோ சூப்பர் ரெசிபி!
இனிப்பு உணவுப் பிரியர்கள் என்றால் கண்டிப்பாக பால் கொழுக்கட்டை பிடிக்கும். கொழுக்கட்டையில் இனிப்பு, உப்பு என பல சுவைகளில் செய்யலாம். நமது வீடுகளில் வழக்கமாக பால் கொழுக்கட்டை செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்றைய தலைமுறையினர் பலருக்கு செய்யத் தெரிவதில்லை. செய்முறையை இங்கு காணலாம்.

வீட்டில் மாலை நேரம் வந்தால் ஏதேனும் சிற்றுண்டி செய்து சாப்பிடுவது வழக்கம். சில சமயங்களில் கடைகளில் சென்று இந்த சிற்றுண்டிகளை வாங்கி வந்து சாப்பிடுவார்கள். சிற்றுண்டி என்றாலே காரமாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. குழந்தைகளுக்கு பிடித்தவாறு இனிப்பாகவும் இருக்கலாம். பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு பிடித்தவாறு தித்திக்கும் பால் கொழுக்கட்டை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெற்றோர்களுக்கு வெளியில் சாப்பிட்டே பழகி விட்டதால் இது போன்ற வீட்டில் செய்யும் உணவுகளை செய்யத் தெரிவதில்லை. இதனை எளிமையாக வீட்டிலேயே எப்படி செய்வது என இங்கு பார்ப்போம்!
தேவையான பொருள்கள்
ஒரு கப் பச்சரிசி
முக்கால் கப் வெல்லம்
ஒரு கப் துருவிய தேங்காய்
அரை டீஸ்பூன் கல் உப்பு
2 ஏலக்காய்
5 கப் தண்ணீர்
செய்முறை
முதலில் வெல்லத்தை பொடியாக நசுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருள்களை எல்லாம் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். உங்களிடம் கொழுக்கட்டை மாவு இருந்தாலும் நேரடியாக பயன்படுத்தலாம். இதுவும் ருசியாக இருக்கும். ஒரு மணி நேரம் கழித்துக் ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடித்து விட்டு ஒரு கிரைண்டரில் போட்டு அதனுடன் தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவை கெட்டியாகவும் நைசாக அரைக்க வேண்டும். மேலும் கிரைண்டரை கழுவி அரை கப் அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை போட்டு கரைய விடவும். வெல்லம் கரைந்ததும் எடுத்து மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும். அதை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கொதித்ததும் அதில் அரைத்து வைத்திருக்கும் மாவை முறுக்கு பிழியும் அச்சியில் மூன்று கண் உள்ள அச்சியில் உரல் கொள்ளும் அளவு மாவை வைத்து அதை வெல்ல பாகில் சுற்றிலும் பிழிந்து விடவும். அதை போல எல்லா மாவையும் பிழிந்து விடவும். கிரைண்டரை கழுவி எடுத்த தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். கொதித்து பொங்கி வரும் போது சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கி விடவும். மாவை பிழிந்தவுடன் கரண்டியை வைத்து கிளறக் கூடாது. ஆனால் சிம்மில் வைத்த பின்னர் ஒரு முறை மெதுவாக கிளறி விடவும். 10 நிமிடம் கழித்து திக்கானதும் இறக்கி விடவும். விருப்பப்பட்டால் வாசனைக்கு ஏலக்காயை பொடி செய்து சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது சுவையான தித்திக்கும் பால் கொழுக்கட்டை தயார். நீங்களும் உங்கள் வீட்டில் இதனை செய்து பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

டாபிக்ஸ்