சப்பாத்திக்கு இதை வைத்து சாப்பிட்டால் சுவை அள்ளும்! மீல்மேக்கர் கிரேவி செய்வது எப்படி? இதோ ஈசியான ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சப்பாத்திக்கு இதை வைத்து சாப்பிட்டால் சுவை அள்ளும்! மீல்மேக்கர் கிரேவி செய்வது எப்படி? இதோ ஈசியான ரெசிபி!

சப்பாத்திக்கு இதை வைத்து சாப்பிட்டால் சுவை அள்ளும்! மீல்மேக்கர் கிரேவி செய்வது எப்படி? இதோ ஈசியான ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Updated Apr 24, 2025 11:18 AM IST

நமது வீட்டில் அடிக்கடி செய்யப்படும் ஒரு உணவு தான் சப்பாத்தி, இதற்கு சைவம், அசைவம் என பல வகையான உணவுகளை செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று சப்பாத்திக்கு வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி என இங்கு காணலாம்.

சப்பாத்திக்கு இதை வைத்து சாப்பிட்டால் சுவை அள்ளும்! மீல்மேக்கர் கிரேவி செய்வது எப்படி? இதோ ஈசியான ரெசிபி!
சப்பாத்திக்கு இதை வைத்து சாப்பிட்டால் சுவை அள்ளும்! மீல்மேக்கர் கிரேவி செய்வது எப்படி? இதோ ஈசியான ரெசிபி!

தேவையான பொருட்கள்

1 கப் மீல் மேக்கர்

1 பெரிய வெங்காயம்

2 தக்காளி

1டேபிள்ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்

2 டீஸ்பூன் மல்லிதூள்

ஒரு கொத்து புதினா இலைகள்

ஒரு கொத்து கொத்தமல்லி இலை

அரை டீஸ்பூன் சோம்பு

சிறிய துண்டு இஞ்சி

8 பல் பூண்டு

2 துண்டு பட்டை

1 ஏலக்காய்

3 கிராம்பு

தாளிக்க:

3 டீஸ்பூன் எண்ணெய்

அரை டீஸ்பூன் சீரகம்

1 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி

சிறிதளவு மல்லிதழை

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி மீல் மேக்கரை போட்டு நன்றாக வேக வைக்க வேண்டும். இதனை குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் வேக விட வேண்டும். பின்னர் இதனை எடுத்து தண்ணீரை வடித்து தனியாக வைக்க வேண்டும். பின்னர் ஒரு மிக்சி ஜாரில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, பட்டை, மிளகாய் தூள், மல்லித் தூள், புதினா, கொத்த மல்லி, பூண்டு இஞ்சி, கிராம்பு மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை போட வேண்டும். இவை அனைத்தையும் தண்ணீர் ஊற்றி மைய அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் கடாயை வைத்து சூடானதும்,எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து,அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும். வதங்கியதும், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.பின் ஊறிய மீல் மேக்கர்-ல் நன்கு தண்ணீர் பிழிந்து சேர்க்கவும். கொதித்ததும்,மூடி போட்டு மீல் மேக்கர் வேக வைக்கவும். இதனுடன் கஸ்தூரி மேதி,மல்லி தழை சேர்த்து கலந்து விட்டு மீண்டும் மூடி வைக்கவும். இவையிரண்டும் தான் கிரேவிக்கு சுவை கூட்டும். நன்கு கொதித்து, தேவையான கிரேவி பதம் வந்ததும்,மல்லித்தழை தூவி பரிமாறலாம்.

Suguna Devi P

TwittereMail
சுகுணா தேவி பி, கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு ஊடகம், மொழிபெயர்ப்பு துறை மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தேசம், லைப்ஸ்டைல் சர்வதேசம், சினிமா உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் ஆங்கில இலக்கியத் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றுள்ள இவர், விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் 2018-2019 ஆம் ஆண்டு பணியாற்றியுள்ளார். மேலும் ஈடிவி பாரத் தமிழ், தமிழ்நாடு அரசு நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான இதழ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.