உங்க வீட்ல மாங்காய் அதிகமா இருக்கா? அப்போ இந்த சுவையான மாங்காய் துவையல் செஞ்சு பாருங்கள்! இதோ அசத்தலான ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உங்க வீட்ல மாங்காய் அதிகமா இருக்கா? அப்போ இந்த சுவையான மாங்காய் துவையல் செஞ்சு பாருங்கள்! இதோ அசத்தலான ரெசிபி!

உங்க வீட்ல மாங்காய் அதிகமா இருக்கா? அப்போ இந்த சுவையான மாங்காய் துவையல் செஞ்சு பாருங்கள்! இதோ அசத்தலான ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Published Jun 03, 2025 09:53 AM IST

மாங்காய் மற்றும் மாம்பழங்கள் இந்த காலத்தில் அதிகமாக கிடைக்கின்றன. மாங்காய் அதிகமாக கிடைத்தால் மாங்காய் துவையல் செய்து வைக்கலாம். சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டால் இதன் சுவை அருமையாக இருக்கும். இத்தகைய மாங்காய் துவையலை செய்வது எப்படி என இங்கு தெரிந்துக் கொள்ளுங்கள்.

உங்க வீட்ல மாங்காய் அதிகமா இருக்கா? அப்போ இந்த சுவையான மாங்காய் துவையல் செஞ்சு பாருங்கள்! இதோ அசத்தலான ரெசிபி!
உங்க வீட்ல மாங்காய் அதிகமா இருக்கா? அப்போ இந்த சுவையான மாங்காய் துவையல் செஞ்சு பாருங்கள்! இதோ அசத்தலான ரெசிபி!

தேவையான பொருட்கள்

மாங்காய் - 2 நறுக்கியது

எண்ணெய் - 1/2 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி

உளுந்து பருப்பு - 2 தேக்கரண்டி

வெந்தயம் - 1 தேக்கரண்டி

தனியா - 2 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 2 தேக்கரண்டி

பூண்டு - 4 பற்கள்

சிவப்பு மிளகாய் - 20

கல்லுப்பு - 1 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி

கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

இடித்த பூண்டு - 5 பற்கள்

சிவப்பு மிளகாய் - 2

பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை

செய்முறை

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடலைப்பருப்பு, உளுந்து பருப்பு, வெந்தயம், தனியா, கடுகு, சீரகம் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். அடுத்து பூண்டு சேர்த்து வறுக்கவும். பின்பு ஒரு தட்டிற்கு மாற்றி ஆறவிடவும். அதே பானில் சிவப்பு மிளகாய் சேர்த்து வறுக்கவும். தட்டிற்கு மாற்றி ஆறவிடவும். ஆறிய பிறகு மிளகாயின் காம்பை எடுத்து விடவும். மிக்ஸர் ஜாரில் வறுத்த மிளகாய், வறுத்த மற்ற பொருட்கள், கல்லுப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

நறுக்கிய மாங்காய் துண்டுகளை சேர்த்து தண்ணீர் இன்றி மீண்டும் கொரகொரப்பாக அரைக்கவும். தாளிப்பு செய்ய சிறிய பானில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், இடித்த பூண்டு சேர்த்து வறுக்கவும். அடுத்து அடுப்பை அணைத்து விட்டு சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் மாங்காய் துவையலுடன் சேர்த்து கலந்து விடவும். சாதம், இட்லி, தோசை உடன் பரிமாற சுவையான மாங்காய் துவையல் சாப்பிட நன்றாக இருக்கும்.