சுவையான மாம்பழ லஸ்ஸி செய்வது எப்படி தெரியுமா? இதோ தெரிஞ்சுக்கோங்க! ஈசியான ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சுவையான மாம்பழ லஸ்ஸி செய்வது எப்படி தெரியுமா? இதோ தெரிஞ்சுக்கோங்க! ஈசியான ரெசிபி!

சுவையான மாம்பழ லஸ்ஸி செய்வது எப்படி தெரியுமா? இதோ தெரிஞ்சுக்கோங்க! ஈசியான ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Dec 18, 2024 03:34 PM IST

தமிழில் கூறப்படும் முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் நம் அனைவருக்கும் பிடிக்கும் ஒரு பழமாகும். மாம்பழம் வைத்து பல உணவுப் பொருட்கள் தயாரிக்கலாம். அதில் முக்கியமான ஒன்றாக மாம்பழ லஸ்ஸி உள்ளது.

சுவையான மாம்பழ லஸ்ஸி செய்வது எப்படி தெரியுமா? இதோ தெரிஞ்சுக்கோங்க! ஈசியான ரெசிபி!
சுவையான மாம்பழ லஸ்ஸி செய்வது எப்படி தெரியுமா? இதோ தெரிஞ்சுக்கோங்க! ஈசியான ரெசிபி!

தேவையான பொருட்கள்

1 மாம்பழம்

1 கப் தயிர்

அரை கப் பால்

அரை டேபிள்ஸ்பூன் ஏலக்காய் தூள்

1 டேபிள்ஸ்பூன் பாதாம்

1 டேபிள்ஸ்பூன் பிஸ்தா

அரை டேபிள்ஸ்பூன் குங்கும பூ

தேவையான அளவு சர்க்கரை

தேவையான அளவு ஐஸ் க்யூப்ஸ்

செய்முறை

முதலில் மாம்பழம், பாதாம், மற்றும் பிஸ்தாவை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஏலக்காயை மிக்சியில் போட்டு அரைத்து பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் அரை லிட்டர் அளவு பாலை ஊற்றி அதை நன்கு காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சிய பாலை சிறிது நேரம் ஆற விட வேண்டும். பிறகு நறுக்கிய மாம்பழத்தை எடுத்து அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஒரு கப் அளவு தயிரை ஊற்றி அதை மீண்டும் ஒரு முறை நன்கு அரைத்து கொள்ளவும்.

பின்பு அதில் காய்ச்சி ஆற வைத்திருக்கும் பால், தேவையான அளவு சர்க்கரை, மற்றும்  தூள் செய்து வைத்திருக்கும் ஏலக்காய் தூளிலிருந்து சுமார் அரை மேஜைக்கரண்டி அளவு சேர்த்து அதை நன்கு அரைத்து கொள்ள வேண்டும். இந்த லஸ்ஸி கெட்டியாக இருந்தால் அதில் சிறிதளவு பால் அல்லது தண்ணீர் சேர்த்து அதை மீண்டும் அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கண்ணாடி தமிழரை எடுத்து அதில் ஐஸ் கட்டிகளை போட வேண்டும். பின்பு   அரைத்த லஸ்ஸியை அதில் ஊற்ற வேண்டும்.பிறகு அதன் மேலே  நறுக்கி வைத்திருக்கும் பிஸ்தா, பாதாம், மற்றும் குங்குமப்பூவை தூவினால் சுவையான மாம்பழ லஸ்ஸி தயார். இதனை எளிமையாக உங்கள் வீட்டிலேயே செய்து பார்க்கலாம். செய்வதற்கும் சில நிமிடங்களே போதும்.  இப்பொழுது உங்கள் அருமையான சில்லென்று இருக்கும் மாம்பழம் லஸ்ஸி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து பருகி மகிழுங்கள். எப்பொழுதும் குழந்தைகளுக்கு மாமபழம் என்றால் மிகவும் பிடிக்கும். இந்த மாம்பழ லஸ்ஸியை செய்து கொடுத்து பாருங்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.