இனி யார் வேண்டுமானாலும் செய்யலாம் மலேசியன் பிரைட் ரைஸ்! இதோ ஈசியான ரெசிபி இருக்கே!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  இனி யார் வேண்டுமானாலும் செய்யலாம் மலேசியன் பிரைட் ரைஸ்! இதோ ஈசியான ரெசிபி இருக்கே!

இனி யார் வேண்டுமானாலும் செய்யலாம் மலேசியன் பிரைட் ரைஸ்! இதோ ஈசியான ரெசிபி இருக்கே!

Suguna Devi P HT Tamil
Published Jun 05, 2025 03:14 PM IST

மலேசியன் பிரைட் ரைஸ் தற்போது இந்தியாவிலும் மிகவும் பிரபலமான உணவாகும். மலேசியன் பிரைட் ரைஸ் சாப்பிட வேண்டும் என்றால் பெரிய ரெஸ்டாரண்ட்களுக்கு செல்ல வேண்டாம். இங்கே மலேசியன் பிரைட் ரைஸ் செய்வது எப்படி எனத் தெரிந்துக் கொள்வோம்.

இனி யார் வேண்டுமானாலும் செய்யலாம் மலேசியன் பிரைட் ரைஸ்! இதோ ஈசியான ரெசிபி இருக்கே!
இனி யார் வேண்டுமானாலும் செய்யலாம் மலேசியன் பிரைட் ரைஸ்! இதோ ஈசியான ரெசிபி இருக்கே!

தேவையான பொருட்கள்

1 கப்பாசுமதி அரிசி

அரை கப் மஸ்ரூம்

அரை கப் பச்சை குடைமிளகாய்

அரை குடை மிளகாய்

அரை கப் சிவப்பு குடைமிளகாய்

அரை கப் வேகவைத்த சோளம்

அரை கப் வேகவைத்த பச்சை பட்டாணி

8 பல் பூண்டு

8 சிவப்பு மிளகாய்

இஞ்சி

துருவிய தேங்காய்

எள் எண்ணெய்

சோயா சாஸ்

வினிகர்

பெப்பர்

உப்பு

சர்க்கரை

தேவையான அளவு ஸ்ப்ரிங் ஆனியன்

தேவையான அளவு தண்ணீர்

செய்முறை

முதலில் ஒரு கப் பாசுமதி அரிசியை எடுத்து தண்ணீர் விட்டு நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். இப்பொழுது மஸ்ரூம், குடமிளகாய்கள், இஞ்சி, பூண்டு, மற்றும் ஸ்ப்ரிங் ஆனியனை நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். அடுத்து நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, பூண்டு, துருவி வைத்திருக்கும் தேங்காய் மற்றும் ஊற வைத்திருக்கும் சிவப்பு மிளகாய்யை மிக்ஸியில் போட்டு நன்றாக பேஸ்ட் ஆக அரைத்துக் வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். பின்பு அதில் உப்பு சேர்த்து ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை நன்கு வடிகட்டி அதில் போட்டு 15 இல் இருந்து இருபது நிமிடம் வரை அதை வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு pan ஐ எடுத்து மிதமான தீயில் அடுப்பில் வைத்து அதில் 2 ஸ்பூன் எள் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சற்று சூடானதும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா பேஸ்ட்டை போட்டு அதனின் பச்சை வாசம் போய் எண்ணெய் நன்கு பிரிந்து வரும் வரை வதக்கவும். பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் மஸ்ரூம் மற்றும் குடை மிளகாய்களை சேர்த்து நன்கு கிளறி விடவும். அடுத்து அதில் உப்பு மற்றும் பெப்பரை சேர்த்து சுமார் ஆறிலிருந்து ஏழு நிமிடம் வரை வேக வைக்கவும். ஆறு நிமிடம் கழித்து நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் சோளம் மற்றும் பச்சை பட்டாணியை அதில் சேர்த்து சுமார் ஐந்து நிமிடம் வரை வேக வைக்கவும். ஐந்து நிமிடம் கழித்து அதில் சோயா சாஸ், வினிகர், மற்றும் சர்க்கரையை சேர்த்து சுமார் ஒன்றிலிருந்து இரண்டு நிமிடம் வரை அதை வதக்கவும். இப்பொழுது அதில் நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை சேர்த்து பூ போல் சாதம் உடையாதவாறு கிளறவும். அடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஸ்பிரிங்காணியனை போட்டு நன்கு கிளறவும். அவ்வளவுதான் உங்கள் சூடான மற்றும் சுவையான மலேசியன் பிரைட் ரைஸ் ரெடி.