Nool Parotta: மதுரை ஸ்பெஷல் நூல் பரோட்டா சாப்பிட்டு இருக்கீங்களா? இதோ இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Nool Parotta: மதுரை ஸ்பெஷல் நூல் பரோட்டா சாப்பிட்டு இருக்கீங்களா? இதோ இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!

Nool Parotta: மதுரை ஸ்பெஷல் நூல் பரோட்டா சாப்பிட்டு இருக்கீங்களா? இதோ இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!

Suguna Devi P HT Tamil
Jan 22, 2025 12:44 PM IST

Nool Parotta: நூல் பரோட்டா சாப்பிடுவதற்கு மிகவும் எளிதாகவும் அதிக சுவையுடனும் இருக்கும். ஆனால் நம்மில் சிலர் இந்த நூல் பரோட்டாவை சாப்பிட்டு இருக்க மாட்டோம். உங்கள் வீட்டிலேயே எளிமையாக நூல் பரோட்டா செய்வதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Nool Parotta: மதுரை ஸ்பெஷல் நூல் பரோட்டா சாப்பிட்டு இருக்கீங்களா? இதோ இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!
Nool Parotta: மதுரை ஸ்பெஷல் நூல் பரோட்டா சாப்பிட்டு இருக்கீங்களா? இதோ இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!

 மதுரையில் நாம் சாதாரணமாக சாப்பிடும் பரோட்டா மட்டுமல்லாமல் வித விதமான பரோட்டாக்களும் போடப்படுகின்றன. பன் போராட்டா ,வீச்சு புரோட்டா, எண்ணெய் பரோட்டா ஆகிய பரோட்டாக்கள் அதிக சுவையுடனும் வித்தியாசமான முறையிலும் தயாரிக்கப்படுகின்றன. இதில் ஒன்றுதான் நூல் பரோட்டா. நூல் பரோட்டா சாப்பிடுவதற்கு மிகவும் எளிதாகவும் அதிக சுவையுடனும் இருக்கும். ஆனால் நம்மில் சிலர் இந்த நூல் பரோட்டாவை சாப்பிட்டு இருக்க மாட்டோம். உங்கள் வீட்டிலேயே எளிமையாக நூல் பரோட்டா செய்வதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

அரை கப் மைதா மாவு 

1 டீஸ்பூன் உப்பு

1 டீஸ்பூன் சர்க்கரை 

1ஸ்பூன் உப்பு

1ஸ்பூன் சர்க்கரை

தேவையான அளவு எண்ணெய்

செய்முறை 

முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் மைதா, சர்க்கரை, உப்பு என எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின் இதில்  சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்றாக மிருதுவாக பிசைந்து கொள்ள வேண்டும். அதிகமாக தண்ணீர் ஊற்றி விடக் கூடாது.  அதன் மேல் எண்ணைய் தடவி நன்றாக ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.  ஒரு மணி நேரம் நன்றாக ஊறிய பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக பிரித்து உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் மீது சிறிதளவு எண்ணெய் தடவி  மீண்டும் ஒரு மணி நேரம் ஈரத்துணியால் மூடி ஊற வைக்க வேண்டும். 

ஒரு மணி நேரம் கழித்து அதை நன்றாக மெல்லியதாக தேய்த்து அதை கத்தியால் நீள நீளமாக  வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.  அதன் பிறகு அதன் மேலே நன்றாக எண்ணெய் தேய்த்து அதன் மேல் சிறிது மைதா மாவை தூவி அதை ஒன்றாக சேர்த்து உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.  இப்போது ஒரு தோசை சத்தி அல்லது தவாவை அடுப்பில் வைத்து அது சூடானதும் அதில் நாம் முன்னதாக உருட்டி வைத்துள்ள பரோட்டாவை கையால் லேசாக தட்டி போட வேண்டும். பரோட்டாவின்  இருபுறமும் நன்றாக வேகும் வரை வேக விட்டு எடுக்க வேண்டும். இந்த வகை பரோட்டாவை முட்டை எதுவும் சேர்க்காமலும் செய்யலாம். முட்டை சேர்த்தும் செயல்லாம்.  முட்டை சேர்க்கும் போது பரோட்டா அதிக அளவில் மிருதுவாக இருக்கும். இப்போது சூடான சுவையான நூல் பரோட்டா தயார். இதனை உங்கள் வீடுகளிலும் ட்ரை பண்ணி பார்த்து அணைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். மதுரை ஸ்பெஷல் பரோட்டா எப்போதும் ருசியான ஒரு உணவு தான். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.