Egg Kothu Parotta: மதுரை ஸ்பெஷல் கொத்து பரோட்டா! இனி வீட்டிலேயே செய்யலாம்! ஈசியான ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Egg Kothu Parotta: மதுரை ஸ்பெஷல் கொத்து பரோட்டா! இனி வீட்டிலேயே செய்யலாம்! ஈசியான ரெசிபி!

Egg Kothu Parotta: மதுரை ஸ்பெஷல் கொத்து பரோட்டா! இனி வீட்டிலேயே செய்யலாம்! ஈசியான ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Oct 03, 2024 09:55 AM IST

Egg Kothu Parotta: பல உணவு வகைகளைக் கொண்ட உணவு நகரமாக மதுரை இருந்து வருகிறது. இங்கு பல விதமான உணவுகள் உள்ளன. மதுரை உணவிற்கு உலக அளவில் நல்ல வரவேற்பு உள்ளது.

Egg Kothu Parotta: மதுரை ஸ்பெஷல் கொத்து பரோட்டா! இனி வீட்டிலேயே செய்யலாம்! ஈசியான ரெசிபி! (KKV CREATIVES)
Egg Kothu Parotta: மதுரை ஸ்பெஷல் கொத்து பரோட்டா! இனி வீட்டிலேயே செய்யலாம்! ஈசியான ரெசிபி! (KKV CREATIVES)

தேவையான பொருட்கள்

3 பரோட்டா

அரை கிலோ சிக்கன் 

4 முட்டை

4 பெரிய வெங்காயம்

4 தக்காளி

2 பச்சை மிளகாய்

6 பல் பூண்டு 

சிறிதளவு இஞ்சி

அரை முடி தேங்காய் 

1 பட்டை 

2 ஏலக்காய்

3 கிராம்பு

சிறிதளவு பொட்டுக்கடலை

சிறிதளவு மிளகு

சிறிதளவு சோம்பு

சிறிதளவு சீரகம்

சிறிதளவு கசகசா

2 பிரியாணி இலை

சிறிதளவு மஞ்சள் தூள்

சிறிதளவு மல்லி தூள்

சிறிதளவு மிளகு தூள்

தேவையான அளவு மிளகாய் தூள்

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு உப்பு

சிறிதளவு கறிவேப்பிலை

சிறிதளவு கொத்தமல்லி

செய்முறை

முதலில் கடாயில் சிரிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, மிளகு, சிறிதளவு சோம்பு, சீரகம், கசகசா, மற்றும் பொட்டுக்கடலையை போட்டு அதை நன்கு வறுக்கவும். அடுத்து அதில் துருவிய தேங்காயை போட்டு வறுக்கவும். பின்பு அதை ஆற வைத்து ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சிரிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் பட்டை, பிரியாணி இலை, மற்றும் சோம்பை சேர்த்து அதை வறுக்கவும். பின் அதில் நறுக்கிய  வெங்காயம், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மல்லி தூள்,  மிளகாய் தூள், மற்றும் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து அதை கலக்கவும்.

பின்பு அதில் நறுக்கிய தக்காளியை போட்டு தக்காளி வதங்கியவுடன் அதில் சுத்தம் செய்த சிக்கனை சேர்த்து அது நன்கு மசாலாவுடன் சேருமாறு கிளறவும். அதில் தண்ணீர் ஊற்றி வேக விடவும். மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் அதில் பொடியாக நறுக்கிய  பூண்டு, பச்சை மிளகாய், மற்றும் சிறிதளவு கறிவேப்பிலையை போட்டு அதை நன்கு கலந்து அதை வதக்கவும். பின்பு அதில் நறுக்கிய தக்காளி, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும். இந்த கடாயில் 2 முட்டையை உடைத்து ஊற்றி கலக்கி விடவும். பின்னர் அதில் பரோட்டாவை சிறு துண்டுகளாக வெட்டி போடவும்.  பின்பு அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவி  கிளறி அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து செய்து வைத்திருக்கும் சிக்கன் சால்னாவுடன் அதை சுட சுட பரிமாறவும். இப்பொழுது சூடான, சுவையான முட்டை கொத்து பரோட்டா ரெடி. 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.