Tirupati Laddu: திருப்பதி கோயில் லட்டு மாதிரி நீங்களும் செய்யலாம்! இதோ இப்படி செஞ்சு பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tirupati Laddu: திருப்பதி கோயில் லட்டு மாதிரி நீங்களும் செய்யலாம்! இதோ இப்படி செஞ்சு பாருங்க!

Tirupati Laddu: திருப்பதி கோயில் லட்டு மாதிரி நீங்களும் செய்யலாம்! இதோ இப்படி செஞ்சு பாருங்க!

Suguna Devi P HT Tamil
Jan 29, 2025 02:14 PM IST

Tirupati Laddu: திருப்பதியில் செய்யப்படும் லட்டுக்கள் மிகவும் அதிக சுவையுடன் இருப்பது என்பது உண்மை. இந்த திருப்பதியில் வழங்கப்படும் லட்டு போன்றே நீங்களே உங்கள் வீட்டில் எளிமையாக செய்ய முடியும். அதிக சுவையுடன் லட்டு செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

Tirupati Laddu: திருப்பதி கோயில் லட்டு மாதிரி நீங்களும் செய்யலாம்! இதோ இப்படி செஞ்சு பாருங்க!
Tirupati Laddu: திருப்பதி கோயில் லட்டு மாதிரி நீங்களும் செய்யலாம்! இதோ இப்படி செஞ்சு பாருங்க! (Amazon)

தேவையான பொருட்கள் 

ஒரு கப் கடலை மாவு 

ஒரு கப் சர்க்கரை 

3 டீஸ்பூன் நெய்

10 முதல் 12 முந்திரி

10 முதல் 12 ஏலக்காய்

20 முதல் 24 உலர் திராட்சை

ஒரு சிட்டிகை மஞ்சள் புட் கலர் பொடி 

தேவையான அளவு எண்ணெய் 

செய்முறை 

முதலில் கடலை மாவினை சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் முந்திரியை சிறு துண்டுகளாகிக் கொள்ள வேண்டும். ஏலக்காயைப் பொடியாக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுதிக்கு ஒரு அடிக்கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரையைக் கொட்டி, தேவையான தண்ணீர் விட்டு கம்பி பதத்திற்கு வருமாறு பாகு காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கம்பி பதம் என்பது கரண்டியில் எடுத்து விரலால் தொட்டு மூன்று வினாடிகள் கழித்து விரலைப் பிரித்தால் மெல்லிய கம்பி இழை போல் வரும்.  குறிப்பிட்ட பதத்திற்கு பாகு தயாரானதும், அந்தப் பாகிலேயே கலர் பவுடர் மற்றும் ஏலப்பொடி ஆகியவற்றை  சேர்க்கவும்.

இப்போது கடலை மாவில் தேவையான அளவு நீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில்  பூந்தி கரண்டியை கடாயிற்கு மேல் நேரடியாக பிடித்து பரவலாக கரைத்த மாவை ஊற்றி விட வேண்டும். இந்த மாவு பூந்தியாக மாறும் வரை சிறிது நேரம் வேக விட வேண்டும். இந்த பூந்தி பதமாக வெந்ததும், பூந்தியை அரிகரண்டி கொண்டு அரித்து எடுத்து, சர்க்கரைப் பாகில் உடனே கொட்டவும். இப்படியே மாவு முழுவதையும் பூந்தியாக பொரித்து பாகில் போட வேண்டும்.  பின்னர் உடைத்த முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து பூந்தியில் கொட்டவும். ஒரு ப்ளாஸ்டிக் பேப்பரை விரித்து அதில் கலவையை பரப்பி கரண்டியால் நன்றாக கலக்கவும். சிறிது சூடு ஆறிய பின்னர் இதனை சிறு சிறு லட்டுகளாக பிடிக்கவும். மிகவும் ஆறிவிட்டால் உருண்டைப் பிடிப்பது கடினம். மிதமான சூட்டிலேயே பிடித்துவிடவும்.இப்பொழுது சுவையான தித்திக்கும் திருப்பதி லட்டு தயார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.