Kerala Special Aviyal: விசேஷ நாட்களில் செய்ய சூப்பரான டிஷ் இது தான்! கேரள ஸ்டைல் அவியல் செய்வது எப்படி? இதோ மாஸ் ரெசிபி!
Kerala Special Aviyal:கல்யாண வீடுகளிலும், சிலரது வீடுகளில் படையலின் போதும் தவறாமல் இடம் பெறுவது அவியல் தான். அவியல் இல்லாமல் தமிழ்நாட்டில் விசேஷ நிகழ்வுகள் நடக்காது என்ற அளவிற்கு வந்து விட்டது. ஆனால் இந்த அவியல் கேரள ஸ்டைலில் செய்யப்படுகிறது தெரியுமா.

கல்யாண வீடுகளிலும், சிலரது வீடுகளில் படையலின் போதும் தவறாமல் இடம் பெறுவது அவியல் தான். அவியல் இல்லாமல் தமிழ்நாட்டில் விசேஷ நிகழ்வுகள் நடக்காது என்ற அளவிற்கு வந்து விட்டது. ஆனால் இந்த அவியல் கேரள ஸ்டைலில் செய்யப்படுகிறது தெரியுமா. அவியலில் எல்லா காய்கறிகளும் கலந்து இருப்பதால் சத்தான உணவாகவும் இருந்து வருகிறது. எனவே அவியல் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இத்தகைய அவியலை சுவையான கேரளா ஸ்டைலில் செய்ய வேண்டுமா. இந்த கட்டுரையை முழுமையாக படித்து தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
1 வாழைக்காய்
1 கேரட்
சிறிய துண்டு சேனைக்கிழங்கு
கொத்தவரங்காய்
வெள்ளைப் பூசணி
அவரை
கோவைக்காய்
1 பெரிய முருங்கைக்காய்
பீன்ஸ் சிறிதளவு
2 கத்தரிக்காய்
அரை கப் தேங்காய் துருவல்
4 பச்சை மிளகாய்
அரை டீஸ்பூன் மஞ்சள்தூள்
1 ஸ்பூன் சீரகம்
3 பல் பூண்டு
அரை கப் தயிர்
செய்முறை
முதலில் அவியல் எத்தனை பேருக்கு செய்ய வேண்டுமோ அந்த அளவிற்கு மட்டும் காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் சரியான அளவில் வரும். பின்னர் அந்த காய்கறிகளை சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த காய்கறிகள் அனைத்தையும் பெரிதாக்கவும், சிறியதாகவும் இல்லாமல் மீடியம் சைஸ் அளவில் வெட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகளை நீள வாக்கில் வெட்ட வேண்டும். அப்போது தான் அவியலுக்கு ருசியை அதிகரிக்க உதவும். பின்னர் ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நாம் நறுக்கி வைதிகத இந்த காய்கறிகளை எல்லாம் சேர்த்து, உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து, அடுப்பில் வைத்து ஒரு மூடி போட்டு, மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். காய்கறிகள் எல்லாம் குழைந்து விடக்கூடாது. காய்கறிகள் குழைந்து விட்டால், அவியல் ருசி குறைந்து விடும். காய்கறிகள் பக்குவமாக வேக விட வேண்டும்.
இப்பொழுது தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்சி ஜாரில் பச்சை மிளகாய், 1 ஸ்பூன் சீரகம், 3 பல் பூண்டு இவைகளை ஒன்றாக சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவேண்டும். பின்னர் துருவிய தேங்காயை சற்று திப்பிதிப்பியாக இருக்குமாறு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவியலில் பூண்டு வேண்டாம் என நினைப்பவர்கள் தவிர்த்து விடலாம். ஆனால் பூண்டு அவியலின் சுவையை கூட்டும். காய்கறிகள் நன்றாக வெந்த பின்பு னாம் அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, வரை மிதமான சூட்டில் சில நிமிடங்கள் அவியலை கொதிக்க விடவேண்டும். இந்த இடத்தில் தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். அவியலை இறக்குவதற்கு முன்பாக, அரை கப் அளவுள்ள தயிரை சேர்த்து கிளறி விட வேண்டும். இதில் மிகவும் புளித்த தயிரைபயன்படுத்தக் கூடாது. இறுதியாக இந்த அவியலில் தாளிப்பை சேர்க்க வேண்டும். அதற்கு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் வற மிளகாய், கறிவேப்பிலை, கடுகு போட்டு தாளிக்க வேண்டும். இதனை அப்படியே அவியலில் ஊற்றினால் சுவையான அவியல் ரெடி.

டாபிக்ஸ்