கேரள ஸ்டைல் பழம்பொரி சாப்பிட்டு இருக்கீங்களா? வீட்டிலேயே எளிமையாக செய்யும் முறையை தெரிஞ்சுக்கோங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கேரள ஸ்டைல் பழம்பொரி சாப்பிட்டு இருக்கீங்களா? வீட்டிலேயே எளிமையாக செய்யும் முறையை தெரிஞ்சுக்கோங்க!

கேரள ஸ்டைல் பழம்பொரி சாப்பிட்டு இருக்கீங்களா? வீட்டிலேயே எளிமையாக செய்யும் முறையை தெரிஞ்சுக்கோங்க!

Suguna Devi P HT Tamil
Published Apr 30, 2025 02:18 PM IST

கேரளாவில் அதிகம் விளையும் நேந்திரம் வாழைப்பழத்தில் இருந்து பழம் பொரி செய்யப்படுகிறது. இது ஒரு இனிப்பு சிற்றுண்டி ஆகும். சில மலையாளிகள் இதனை காலை உணவாகவும் சாப்பிடுகிறார்கள். இன்று இதனை வீட்டிலேயே எளிமையாக செய்வது எப்படி என காண்போம்.

கேரள ஸ்டைல் பழம்பொரி சாப்பிட்டு இருக்கீங்களா? வீட்டிலேயே எளிமையாக செய்யும் முறையை தெரிஞ்சுக்கோங்க!
கேரள ஸ்டைல் பழம்பொரி சாப்பிட்டு இருக்கீங்களா? வீட்டிலேயே எளிமையாக செய்யும் முறையை தெரிஞ்சுக்கோங்க!

இப்போது இந்த நேந்திரம் பழம் அல்லது எத்தப்பழம் இந்தியாவிலோ அல்லது இந்தியாவிற்கு வெளியேயோ எல்லா இடங்களிலும் எளிதில் கிடைக்காது. எனவே நீங்கள் உறுதியாகப் பழுத்த வாழைப்பழங்களைப் பயன்படுத்தலாம். மிகவும் பழுத்த அல்லது மிகவும் மென்மையான வாழைப்பழங்களைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அவை இனிப்பாகவும் உறுதியாகவும் இருக்கும். நேந்திரம் பழத்தைப் பயன்படுத்தினால், பழுத்தவற்றைப் பயன்படுத்தவும்.

தேவையான பொருட்கள்

4 நேந்திரம் வாழைப்பழம்

1 கப் மைதா மாவு

அரை கப் அரிசி மாவு

கால் கப் இட்லி மாவு

கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்

அரை டீஸ்பூன் உப்பு

கால் கப் சர்க்கரை

2 சிட்டிகை சமையல் சோடா

செய்முறை

முதலில் ஒரு அகன்ற கிண்ணத்தில் மைதா மாவு, அரிசி மாவு, இட்லி மாவு, மஞ்சள்தூள், உப்பு, சர்க்கரை, சமையல் சோடா ஆகியவற்றை ஒன்றாக சேர்க்க வேண்டும். பின்னர் இதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்க வேண்டும். இந்த மாவில் கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும். கட்டிகள் இருந்தால் பொரிக்கும் போது நன்றாக இருக்காது. பின்னர் இவ்வாறு கலந்த வைத்த மாவு கலவையை மூடி வைத்து ஒரு மணி நேரம் புளிக்க விட வேண்டும். இப்பொழுது நன்கு பழுத்த நேந்திரம் பழத்தை சிறிது தடிமனாக நீளவாக்கில் துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

நீளவாக்கில் வெட்டிய நேந்திரம் பழம் துண்டை புளிக்க வைத்துள்ள பஜ்ஜி மாவில் தோய்த்து எடுக்க வேண்டும். அதற்கு முன்பாக ஒரு பெரிய கடாயை அடுப்பில் வைத்து பழம்பொரி பொரிக்கத் தேவையான எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடான பின்னர் மாவில் தோய்த்த பழத்தினை சேர்த்து இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இனிப்பு கலந்த இந்த புதுமையான பஜ்ஜி சூடாக சுவைக்க ருசியாக இருக்கும். இதனை கோடை விடுமுறையில் இருக்கும் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். மிகவும் மகிழ்ச்சியாக விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இதனை காலை உணவுடனும் சேர்த்து சாப்பிடலாம். இது போன்ற புது விதமான உணவுகளை செய்து தரும் போது அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்கும் உங்கள் வீடுகளில் இதனை செய்து பார்த்து சாப்பிட்டு மகிழுங்கள்.