கர்நாடக ஸ்பெஷல் பிஸ்பிலா பாத் செய்வது எப்படி? யார் வேணுமானாலும் செய்யலாம்! இதோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கர்நாடக ஸ்பெஷல் பிஸ்பிலா பாத் செய்வது எப்படி? யார் வேணுமானாலும் செய்யலாம்! இதோ ரெசிபி!

கர்நாடக ஸ்பெஷல் பிஸ்பிலா பாத் செய்வது எப்படி? யார் வேணுமானாலும் செய்யலாம்! இதோ ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Dec 19, 2024 02:43 PM IST

இந்தியா முழுவதும் பல உணவுகள் மிகவும் பிரபலமான உணவாக இருந்து வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு சிறிய பகுதிகளில் கூட ஒரு உணவு பிரபலமானதாக இருக்கும். அந்த வகையில் கர்நாடகா மாநிலத்தில் பிரபலமான உணவாக இருந்து வரும் பிஸ்பிலா பாத்தை உங்களது வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்.

கர்நாடக ஸ்பெஷல் பிஸ்பிலா பாத் செய்வது எப்படி? யார் வேணுமானாலும் செய்யலாம்! இதோ ரெசிபி!
கர்நாடக ஸ்பெஷல் பிஸ்பிலா பாத் செய்வது எப்படி? யார் வேணுமானாலும் செய்யலாம்! இதோ ரெசிபி!

தேவையான பொருட்கள் 

1 கப் அரிசி

அரை கப் துவரம் பருப்பு

தேங்காய்

1 டீஸ்பூன் வெந்தயம்

200 கிராம் சின்ன வெங்காயம்

2 தக்காளி

சிறிதளவு பீன்ஸ்

2 கேரட்

3 கத்திரிக்காய்

1 உருளைக்கிழங்கு

சிறிதளவு பட்டாணி

1 டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு

அரை டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு

முந்திரி பருப்பு 

1 டேபிள்ஸ்பூன் மிளகு

1 டேபிள்ஸ்பூன் மல்லி

சிறிதளவு புளி 

1 டேபிள்ஸ்பூன் சோம்பு

1 டேபிள்ஸ்பூன் கிராம்பு

வற மிளகாய்

1 பச்சை மிளகாய்

அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள்

அரை டேபிள்ஸ்பூன் கடுகு

கால் டேபிள்ஸ்பூன் பெருங்காய தூள்

கறிவேப்பிலை சிறிதளவு

கொத்தமல்லி சிறிதளவு

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு நெய் 

தேவையான அளவு உப்பு 

செய்முறை 

முதலில்  ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் அரிசி மற்றும் துவரம் பருப்பை நன்கு கழுவி போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி  வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த சாதத்தை மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகு, மல்லி விதை, சோம்பு, மற்றும் கிராம்பு சேர்த்து வறுக்கவும். பின்பு அதில் வற மிளகாயை சேர்த்து வறுத்து பின்பு துருவிய தேங்காயை போட்டு அதன் ஈரப்பதம் போகும் வரை வறுக்கவும். பின்பு இதனை ஆற வைத்து ஒரு மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின் வேறொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும். எண்ணெய் சுட்டதும் அதில் வெந்தயத்தை போட்டு வதக்கவும். பின்னர் அதில் சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். மேலும் இதில் நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கவும். 

தக்காளி வதங்கியதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் பீன்ஸ், கேரட், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, மற்றும் பச்சை பட்டாணியை சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள் தூள் சேர்க்கவும். அரைத்து வைத்திருக்கும் மசாலாவை போட்டு நன்கு கிளறி தேவையான அளவு உப்பு,  தண்ணீர் ஊற்றி கிளறி வேக விடவும். அடுத்து சாம்பார் பாத்திரத்தைத் திறந்து அதில் கரைத்து வைத்திருக்கும் புளித்தண்ணீர் ஊற்றி அதனின் பச்சை வாசம் போகும் வரை சாம்பாரை கொதிக்க விடவும். பின்பு அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு மசித்து வைத்திருக்கும் சாதத்தை  சேர்த்து நன்கு கிளறி விடவும். இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நெய்யை ஊற்றி சுட வைக்கவும். நெய் சுட்டதும் அதில் முந்திரியை போட்டு முந்திரியை பொன் நிறம் வரும் வரை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுத்து கடுகைப் போட்டு கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் வற மிளகாய்,  உளுத்தம் பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, பெருங்காய தூள் சேர்த்து வறுக்கவும். பின்னர் வறுத்த முந்திரி, உளுத்தம் பருப்பு, மற்றும் சிறிதளவு கொத்தமல்லியை சாதத்தில் சேர்த்து நன்கு கிளறி எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.