Jackfruit Seed Curry: பலாபழம் சாப்பிட்டு கொட்டையை தூக்கி எறியாதீர்கள்! சூப்பரான குழம்பு வைக்கலாம்! இதோ பக்கா ரெசிபி!
Jackfruit Seed Curry: தமிழின் முக்கனிகளில் ஒன்றான பலாவின் சுவை தித்திப்பாக இருக்கும்.இந்த பலாவின் கொட்டைகளை தூக்கி ஏறிய வேண்டாம். இதனை வெறுமன அவிய வைத்து சாப்பிட்டாலே மிகவும் ருசியாக இருக்கும். இப்போது இந்த பலா கொட்டையை வைத்து சுவையான குழம்பு செய்வது எப்படி என்பதை இங்கு தெரிந்துக் கொள்ளலாம்.

இந்தியாவில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலும், செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலும் பலாபழம் சீசன் இருக்கிறது. சில சமயங்களில் ஜனவரி வரை இந்த பழங்கள் கிடைக்கும். இது போன்ற சமயங்களில் அந்த பழங்களை சாப்பிடுவது நல்லது. மருத்துவர்களும் அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை சாப்பிடுமாறு பரிந்துரை செய்கின்றனர். தமிழின் முக்கனிகளில் ஒன்றான பலாவின் சுவை தித்திப்பாக இருக்கும். நாம் சாப்பிடும் இந்த பலாவின் கொட்டைகளை தூக்கி ஏறிய வேண்டாம். இதனை வெறுமன அவித்து சாப்பிட்டாலே மிகவும் ருசியாக இருக்கும். இப்போது இந்த பலா கொட்டையை வைத்து சுவையான குழம்பு செய்வது எப்படி என்பதை இங்கு தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
20 முதல் 25 பலாக்கொட்டை
2 தக்காளி
2 பெரிய வெங்காயம்
ஒரு டீஸ்பூன் மல்லித் தூள்
4 பச்சை மிளகாய்
ஒரு டீஸ்பூன் சோம்பு
ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள்
ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள்
ஒரு தேங்காய்
ஒரு டீஸ்பூன் கடுகு
2 டீஸ்பூன் கடலைப்பருப்பு
3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
தேவையான அளவு உப்பு
ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை
ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள பலாக்கொட்டைகளில் உள்ள தோலை நீக்கிவிட்டு இரண்டு துண்டுகளாக வெட்டி ஒரு இட்லி சட்டியிலோ அல்லது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனுள் போட்டோ வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் ஒரு ஸ்பூன் சோம்பு, நறுக்கிய பெரிய வெங்காயம், ஒரு தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட வேண்டும். இவை அனைத்தும் நன்கு வதங்கிய பின் அதில் துருவிய தேங்காய், ஒரு ஸ்பூன் மல்லித் தூள் ஆகியவற்றை சேர்த்து கலந்து விட்டு வதக்க வேண்டும். இவை அனைத்தும் ஆறிய பின் ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் கடாயை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானவுடன் அதில் ஒரு ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, நறுக்கிய பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வதங்கிய பின், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின் வேக வைத்துள்ள பலாக்கொட்டை, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், அரைத்து வைத்துள்ள மசாலா, தேவையான அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும். இறுதியாக, கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும். சுவையான சூடான பாலக்கொட்டை குழம்பு தயார். இதனை உங்களது வீடுகளில் செய்து பார்த்து அணைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த பலாக்கொட்டையை வைத்து பல விதமான உணவு வகைகள் செய்யலாம்.

டாபிக்ஸ்