Instant Sambar Recipe: காலை நேரத்துல டென்ஷன் ஆகத் தேவையில்லை! அதான் இன்ஸ்டன்ட் சாம்பார் இருக்கே! சூப்பர் ரெசிபி!
Instant Sambar Recipe: தமிழ்நாட்டில் உள்ள வீடுகளுக்கு காலை வேளையில் சென்று பார்த்தால் பரபரப்பான சூழலை பார்க்கலாம். குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும், பெரியவர்கள் அலுவலகத்திற்கு செல்லவும் கிளம்பி கொண்டு இருப்பார்கள். ஆனால் இந்த அவசர சமயத்தில் மிகவும் சிக்கலான விஷயம் என்னவென்றால் சமையல் செய்வது தான்.

தமிழ்நாட்டில் உள்ள வீடுகளுக்கு காலை வேளையில் சென்று பார்த்தால் பரபரப்பான சூழலை பார்க்கலாம். குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும், பெரியவர்கள் அலுவலகத்திற்கு செல்லவும் கிளம்பி கொண்டு இருப்பார்கள். ஆனால் இந்த அவசர சமயத்தில் மிகவும் சிக்கலான விஷயம் என்னவென்றால் சமையல் செய்வது தான். உடனடியாக சமையல் வேலை முடிய வேண்டும். இல்லையென்றால் மற்ற எந்த வேலைகளும் முடியாது. காலையில் நமது வீடுகளில் இட்லி, தோசை மற்றும் பொங்கல் இவைகளில் எதேனும் ஒன்றை செய்வது வழக்கம். இவை ஏதுவாக இருந்தாலும் சாம்பார் தான் சிறந்த தேர்வாகும். ஆனால் சாம்பார் செய்யவே குறைந்தது 30 நிமிடங்கள் தேவைப்படலாம். சட்டுனு இன்ஸ்டண்ட் சாம்பார் வைக்க தெரியுமா? வாருங்கள் இங்கு தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருள்கள்
கால் கப் துவரம்பருப்பு
கால் கப் பாசிப்பருப்பு
கால் கப் கடலைப்பருப்பு
1 தக்காளி
1 பச்சை மிளகாய்
4 முதல் 8 சின்ன வெங்காயம்
1 டேபிள் ஸ்பூன் ஆச்சி சாம்பார் பொடி
அரை டீஸ்பூன் மஞ்சள்தூள்
அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள்
சிறிதளவு கொத்தமல்லித்தழை
தேவையான அளவு உப்பு
3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
அரை டீஸ்பூன் கடுகு
அரை டீஸ்பூன் உளுந்தம்பருப்பு
சிறிதளவு கறிவேப்பிலை
செய்முறை
முதலிள் அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் அடிக்கில் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு மூன்றையும் போட்டு நன்கு வறுத்து சிறிது நேரம் ஆறவிட வேண்டும். இவை அனைத்தும் நன்கு ஆறிய பிறகு ஒரு மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். நாம் அரைத்து வைத்துள்ள பொடியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தக்காளியை பொடிதாகவும், வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீளவாக்கிலும் வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர அடுப்பில் அதே கடாயை வைத்துசிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
இந்த தக்காளி நன்கு வதங்கிய பின்னர அதனுடன் கடைகளில் வாங்கிய சாம்பார் பொடி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கிளறி விடவும். பிறகு இதில் தேவையா அளவு உப்பு, 2 கப் அளவுள்ள தண்ணீர் சேர்த்து மசாலா வாசம் போகும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும். பிறகு நாம் அரைத்து கலக்கி வைத்துள்ள பொடியை சேர்த்து மல்லித்தழையும் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பில் இருந்து இறக்கவும். பொடியை சேர்த்து அதிக நேரம் கொதிக்க வைக்க கூடாது. பிறகு இவற்றை பாத்திரத்திற்கு மாற்றி விடவும். அடுப்பில் கடாயை வைத்து தாளிக்கத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, உளுந்தம்பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் எடுத்து குழம்பில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான இட்லி சாம்பார் ரெடி. இதனை இட்லி, தோசை மற்றும் வெண்பொங்கல் ஆகிய எல்லவற்றிற்கும் வைத்து சாப்பிடலாம்.

டாபிக்ஸ்