காரசாரமான ஹைதராபாத் தால்சா! எல்லாத்தும் இது ஒன்னு போதும்! பக்கா ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  காரசாரமான ஹைதராபாத் தால்சா! எல்லாத்தும் இது ஒன்னு போதும்! பக்கா ரெசிபி!

காரசாரமான ஹைதராபாத் தால்சா! எல்லாத்தும் இது ஒன்னு போதும்! பக்கா ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Nov 27, 2024 07:42 AM IST

வெவ்வேறு ஊர்களின் சமையல் எப்போதும் ஒரு தனி சுவவையுடன் இருக்கும். நமது ஊர் உணவைத் தாண்டி மற்ற ஊர்களினன் உணவையும் ருசித்து உண்ண மனம் ஏங்கும். அந்த வரிசையில் ஹைதராபாத்தின் அனைத்து விதமான உணவுகளுக்கும் தனி இடம் உண்டு.

காரசாரமான ஹைதராபாத் தால்சா! எல்லாத்தும் இது ஒன்னு போதும்! பக்கா ரெசிபி!
காரசாரமான ஹைதராபாத் தால்சா! எல்லாத்தும் இது ஒன்னு போதும்! பக்கா ரெசிபி! (Ashus Delicacies)

தேவையான பொருட்கள்

கால் கப் துவரம் பருப்பு 

கால் கப் கடலை பருப்பு

கால் கப்பாசி பருப்பு 

1 பெரிய வெங்காயம் 

1 தக்காளி 

2 பச்சை மிளகாய் 

கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் 

தேவையான அளவு உப்பு 

சிறிதளவு கொத்தமல்லி இலை 

சிறிதளவு புதினா இலை 

ஹைதராபாதி தால்சா செய்ய

1 சுரைக்காய் 

சமையல் எண்ணெய் 

1 பட்டை 

5 கிராம்பு

6 ஏலக்காய் 

2 வற மிளகாய் 

சிறிதளவு மிளகு 

1 பெரிய வெங்காயம்

இஞ்சி பூண்டு விழுது 

1 தக்காளி 

1 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்

1 டீஸ்பூன் சீரக தூள் 

1 டீஸ்பூன் தனியா தூள் 

1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்

புளி தண்ணீர்

கஸதூரிமேத்தி 

கொத்தமல்லி இலை

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பு, கடலை பருப்பு, பாசி பருப்பு சேர்த்து நன்கு கழுவி போதுமான அளவு தண்ணீர் ஊற்றி சில மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.பின்னர் ஒரு குக்கரில் ஊறவைத்த பருப்பை சேர்த்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும். இதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு முறை கலக்க வேண்டும். இதனுடன் தண்ணீர், கைப்பிடியளவு நறுக்கிய கொத்தமல்லி இலை, புதினா இலை சேர்க்கவும்.  குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். இப்பொழுது அதை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.  பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, மிதமான சூட்டில்  எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடான பின்னர் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சிவப்பு மிளகாய், மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுக்கவும். பிறகு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.

பொன்னிறம் வரும் வரை வதக்கவும், இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். நன்றாக வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளி, உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் சேர்க்கவும். அனைத்தையும் நன்றாக கலக்கவும்.பின்னர் சுரைக்காய் துண்டுகளை சேர்க்கவும். அனைத்தையும் நன்கு கலக்கவும். தண்ணீர், கலந்து கடாயை மூடி 10 நிமிடங்கள் சமைக்கவும். இந்த மசாலா கலவையில் சமைத்த பருப்பைச் சேர்த்து, அனைத்தையும் நன்கு கலக்கவும். கடாயை மூடி ஐந்து நிமிடங்கள் சமைக்கவும். புளி சாறு சேர்த்து அனைத்தையும் நன்கு கலக்கவும். இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும். சிறிது நசுக்கிய கசூரி மேத்தி மற்றும் கொத்தமல்லி இலை சேர்க்கவும். சுவையான ஹைதராபாதி தால்சா ரெடி. நீங்களே வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.