Horse Gram Chutney: காலை உணவுக்கு சத்தான கொள்ளு சட்னி வச்சு பாருங்க! சிம்பிள் ரெசிபி இதோ!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Horse Gram Chutney: காலை உணவுக்கு சத்தான கொள்ளு சட்னி வச்சு பாருங்க! சிம்பிள் ரெசிபி இதோ!

Horse Gram Chutney: காலை உணவுக்கு சத்தான கொள்ளு சட்னி வச்சு பாருங்க! சிம்பிள் ரெசிபி இதோ!

Suguna Devi P HT Tamil
Jan 15, 2025 08:19 AM IST

Horse Gram Chutney:குதிரைகளுக்கு வழங்கப்படும் கொள்ளு மிகவும் மகத்தான உணவாகும். இந்த கொள்ளு பல விதமான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. இந்த கொள்ளு பருப்பை அடிக்கடி உணவில் சேர்ப்பது மிகுந்த நன்மை பயக்கும். சுவையான கொள்ளு சட்னி செய்வது எப்படி என்பதை இங்கு தெரிந்துக் கொள்ளுங்கள்.

Horse Gram Chutney: காலை உணவுக்கு சத்தான கொள்ளு சட்னி வச்சு பாருங்க! சிம்பிள் ரெசிபி இதோ!
Horse Gram Chutney: காலை உணவுக்கு சத்தான கொள்ளு சட்னி வச்சு பாருங்க! சிம்பிள் ரெசிபி இதோ!

தேவையான பொருட்கள்

 1 கப் கொள்ளு

2 பெரிய வெங்காயம் 

1 தக்காளி 

6 பல்லு பூண்டு 

1 டீஸ்பூன் சீரகம் 

1 டீஸ்பூன் மல்லித்தூள்  

3 பச்சை மிளகாய் 

சிறிய அளவிலான புளி 

ஒரு கொத்து கறிவேப்பிலை

தேவையான அளவு  எண்ணெய்

தேவையான அளவு உப்பு 

 செய்முறை

  முதலில் தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கிய தக்காளி மற்றும் கொண்டு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் ஒரு சேர வைத்து வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம், சீரகம், மல்லித்தூள் கீறிய பச்சை மிளகாய் ஒரு கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை சேமித்து சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்தவுடன் நாம் வேகவைத்து எடுத்த கொள்ளும் மற்றும் தக்காளியை சேர்த்து அதில் போட்டு வதக்க வேண்டும். பின்னர் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும் இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் இறுதியாக புளித்தண்ணீரை இதில் சேர்க்க வேண்டும். மேலும் இவை அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் சட்னியை வதக்குவதற்கு ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் கறிவேப்பிலை மற்றும் கடுகு உளுத்தம் பருப்பை போட வேண்டும். நன்கு பொறிந்த பின்னர் அதில் அரைத்த சட்னி கலவையை அதில் ஊற்ற வேண்டும். இறுதியாக  கொத்தமல்லி தலையையும் தூவி வைத்துக்கொள்ள வேண்டும். சுட சுட கொள்ளு சட்னி தயார். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். ஊட்டச்சத்து நிறைந்த உணவாக இருக்கும். முக்கியமாக  சட்னி அரைக்கும் போது கொள்ளு வேக வைத்த நீரை பயன்படுத்தவும்.அரைக்கும் போது 5 நறுக்கிய சின்ன வெங்காயத்தை பச்சையாக சேர்த்து அரைத்தால் நன்றாக இருக்கும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.