சத்தான கம்பு வடை! ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இது தான் சூப்பர் சாய்ஸ்! இப்பவே தெரிஞ்சுக்கோங்க ஈசியான ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சத்தான கம்பு வடை! ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இது தான் சூப்பர் சாய்ஸ்! இப்பவே தெரிஞ்சுக்கோங்க ஈசியான ரெசிபி!

சத்தான கம்பு வடை! ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இது தான் சூப்பர் சாய்ஸ்! இப்பவே தெரிஞ்சுக்கோங்க ஈசியான ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Jan 04, 2025 11:28 AM IST

தமிழ் நாட்டின் மக்களின் பாரம்பரிய உணவாக இருந்து வந்த சிறு தானியங்கள் மாறி தற்போது நவீன உணவு வகைகள் வந்து விட்டது. ஆனால் இன்றும் மருத்துவர்கள் சிறு தானிய வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள பரிந்துரை செய்கின்றனர்.

சத்தான கம்பு வடை! ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இது தான் சூப்பர் சாய்ஸ்! இப்பவே தெரிஞ்சுக்கோங்க ஈசியான ரெசிபி!
சத்தான கம்பு வடை! ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இது தான் சூப்பர் சாய்ஸ்! இப்பவே தெரிஞ்சுக்கோங்க ஈசியான ரெசிபி! (atchayapathrafoods)

தேவையான பொருட்கள் 

400 கிராம் கம்பு

200 கிராம் உளுந்து மாவு 

2 டீஸ்பூன் சீரகம் 

5 பச்சை மிளகாய் 

2 டீஸ்பூன் மல்லி 

1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் 

சிறிதளவு கறிவேப்பிலை 

தேவையான அளவு எண்ணெய் 

தேவையான அளவு உப்பு

செய்முறை 

முதலில் கம்பை சுத்தம் செய்து பின்பு ஒரு மிக்சி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த மாவில் உளுந்த மாவினை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் இதில் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி இதில் சேர்க்க வேண்டும். மேலும் இதில் சீரகம் மற்றும் மல்லிப் பொடியை சேர்த்து கலக்க வேண்டும். இப்பொழுது இதில் பெருங்காயத்தூள், நறுக்கிய கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு நன்கு கிளறி விட வேண்டும். தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கலக்க வேண்டும். அதிக அளவிலான தண்ணீர் ஊற்றக் கூடாது. 

மிருதுவான வடை மாவு தயார். இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து வடை சுடுவதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளவும். எண்ணெய் சூடானதும் அதில் வடை மாவை சிறிது சிறிதாக தட்டி போட வேண்டும். இந்த வடையில ஓட்டை போட வேண்டும் என நினைத்தால் போட்டுக் கொள்ளுங்கள். நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் போட்டு இரண்டு முறை திருப்பி விட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இவற்றை ஒரு எண்ணெய் உறிஞ்சும் தாளில் அல்லது ஒரு வடிக்கட்டியில் வைக்க வேண்டும். எண்ணெய் நன்கு குறைந்த பின்னரே இதனை சாப்பிட வேண்டும். நாம் தயார் செய்த இந்த கம்பு வடையை ஒரு தட்டில் வைக்கவும். தேங்காய் சட்னி, சாம்பாருடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இதனை உங்களது வீட்டிலும் முயற்சி செய்து பார்த்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். மாலை நேரம் சூடான டீயுடன் சாப்பிட இது சிறப்பான தேர்வாக அமையும் என்பது உண்மை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் இந்த கம்பு வடையை சாப்பிடலாம். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.