உடல் எடையைக் குறைக்கும் வல்லமை கொண்ட ராகி கொழுக்கட்டை! சட்டுனு செய்யலாம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உடல் எடையைக் குறைக்கும் வல்லமை கொண்ட ராகி கொழுக்கட்டை! சட்டுனு செய்யலாம்!

உடல் எடையைக் குறைக்கும் வல்லமை கொண்ட ராகி கொழுக்கட்டை! சட்டுனு செய்யலாம்!

Suguna Devi P HT Tamil
Nov 20, 2024 10:00 AM IST

ராகி எனும் கேழ்வரகு தானியம் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. இத்தகைய ராகி மாவை வைத்து ருசியான கொழுக்கட்டை செய்யலாம்.

உடல் எடையைக் குறைக்கும் வல்லமை கொண்ட ராகி கொழுக்கட்டை! சட்டுனு செய்யலாம்!
உடல் எடையைக் குறைக்கும் வல்லமை கொண்ட ராகி கொழுக்கட்டை! சட்டுனு செய்யலாம்! (Cookpad)

தேவையான பொருட்கள்

1 கப் கேழ்வரகு மாவு 

1 கப் வெல்லம் 

அரை கப் தண்ணீர் 

அரை கப் அவல் 

அரை கப் நிலக்கடலை

100 கிராம் நெய் 

1 கப் துருவிய தேங்காய் 

2 டீஸ்பூன் ஏலக்காய் தூள் 

செய் முறை

முதலில் வெல்லப்பாகு காய்ச்ச ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதித்த பின் வெல்லத்தை பொடியாக்கி போட வேண்டும். வெல்லம் நன்கு கரையும் வரை கிண்டி விட வேண்டும். நன்கு கரைந்த பின்னர் அடுப்பை அணைத்து இறக்கி வைக்க வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் ராகி மாவை போட்டு வறுக்க வேண்டும். நன்கு வாசம் வரும் வேளையில் அவலை பொடியாக்கி இதில் சேர்த்து வறுக்கவும்.  பின்னர் இதில் ஒரு கப் துருவிய தேங்காயை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். அரை கப் பொடித்த நிலக்கடலை சேர்த்து கலந்து கொள்ளவும்.

இப்பொழுது அடுப்பை அணைத்து, வெல்ல பாகை வடிகட்டி இந்த கலவையில் சேர்க்க வேண்டும். மேலும் இதில் சிறிது நெய் மற்றும் சிறிது ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக கலந்து விட வேண்டும். இந்த மாவை கொழுக்கட்டை அளவுக்கு  பிடித்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு இட்லி பாத்திரத்தில் நெய் தடவி, பிடித்த கொழுக்கட்டையை பதினைந்து நிமிடம் வேக வைக்கவும் . இப்பொழுதிக்கு சுவையான ராகி கொழுக்கட்டை தயார்.இது உடலுக்கும் பல நன்மைகளை அளிக்கிறது. 

ராகியின் நன்மைகள் மற்றும் சத்துகள்

100 கிராம் ராகியில் 320 கலோரிகள் உள்ளன. புரதச்சத்து 7 கிராம் உள்ளது. கார்போட்ரேட் சத்துக்கள் 67 கிராம் உள்ளது. நார்ச்சத்து 11 கிராம் உள்ளது. கால்சிய சத்து 364 மில்லி கிராம் உள்ளது. இரும்புச்சத்து 4.62 மில்லி கிராம் உள்ளது.

சிறுதானிய வகைகளுள் ஒன்றான ராகி பிங்கர் மில்லட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான தானியம். அதில் உள்ள சத்துக்களை தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் சைவ உணவுப்பிரியர் என்றால் கேழ்வரகு சிறந்த புரதச்சத்தை வழங்குகிறது. இதை நீங்கள் தினசரி உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம். இது சுவை நிறைந்ததும் கூட ஆகும்.

அதிக நார்ச்சத்து நிறைந்தது. இதனால், கேழ்வரகு உங்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

ராகி, உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது. இதில் உள்ள அதிக புரதச்சத்து அடிக்கடி பசி ஏற்படாமல் தடுக்கிறது. இதனை உணவில் சேர்த்து வர உடல் எடையில் பெரிய மாற்றத்தை பார்க்கலாம். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.