பெண்களுக்கு இரும்பு சத்தை கொடுக்கும் முருங்கை கீரை சூப்! இப்போவே செய்யலாம்! ஈசி ரெசிபி இதோ!
உடலுக்கு பல வகைகளில் வலிமை அளிக்க கூடிய முருங்காய்க்கீரையை வைத்து சுவையான சூப் செய்வது எப்படி எனபதை இங்கு காண்போம்.
கீரை வகைகள் உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கக்கூடிய உணவாகும். இருப்பினும் இதனை வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவதில்லை. கீரைகளில் அதிக இரும்பு சத்து உடைய கீரை தான் முருங்கை கீரை. இதனை தொடர்ந்து உணவில் சேர்த்து வர பெண்களுக்கு இரும்பு சத்து கிடைக்கும். மேலும் குழந்தைகளின் வளர்ச்சி மேம்படும். உடலுக்கு பல வகைகளில் வலிமை அளிக்க கூடிய முருங்காய்க்கீரையை வைத்து சுவையான சூப் செய்வது எப்படி எனபதை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
முருங்கைக்கீரை
8 முதல் 12 சின்ன வெங்காயம்
1 தக்காளி
1 பச்சை மிளகாய்
2 பல் பூண்டு
1 துண்டு இஞ்சி
2 காய்ந்த மிளகாய்
1 டேபிள்ஸ்பூன் கடுகு
அரை டேபிள்ஸ்பூன் சீரகம்
அரை டேபிள்ஸ்பூன் மிளகு தூள்
அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள்
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு உப்பு
சிறிதளவு கறிவேப்பிலை
சிறிதளவு கொத்தமல்லி
செய்முறை
முதலில் முருங்கைக்கீரையை பூவோடு ஆய்ந்து வைத்து கொள்ளவும். மேலும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இஞ்சி மற்றும் பூண்டை இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு உள்ள எண்ணெய் ஊற்றி அதை சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடான பின் அதில் கடுகை போட்டு கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன் அதில் சீரகத்தைப் போட்டு அதை வறுக்கவும். சீரகம் வறுபட்டதும் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் காய்ந்த மிளகாயை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் இடித்து வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பூண்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும். இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு தக்காளி நன்கு மசியும் வரை அதை வதக்கவும். தக்காளி நன்கு மசிந்ததும் அதில் மஞ்சள் தூளை போட்டு ஒரு பிரட்டு பிரட்டி அதில் கருவேப்பிலை, கொத்தமல்லி, மற்றும் ஆய்ந்து வைத்திருக்கும் முருங்கைக்கீரையை போட்டு அதை நன்கு கிளறி விடவும். அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு சுமார் 5 லிருந்து 7 நிமிடம் வரை கொதிக்க விடவும். 7 நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூளை போட்டு அதை சுமார் 2 லிருந்து 4 நிமிடம் வரை அதை கொதிக்க விடவும். 4 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு சூப்பை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதை சுட சுட பரிமாறவும். இப்பொழுது உங்கள் சூடான மற்றும் உடம்பிற்கு இதமான முருங்கைக்கீரை சூப் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து பருகி மகிழுங்கள்.
டாபிக்ஸ்