பக்ரீத்திற்கு வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு செய்து கொடுக்க சூப்பர் டிஷ்! நெய் சிக்கன் வறுவல் எப்படி செய்வது!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பக்ரீத்திற்கு வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு செய்து கொடுக்க சூப்பர் டிஷ்! நெய் சிக்கன் வறுவல் எப்படி செய்வது!

பக்ரீத்திற்கு வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு செய்து கொடுக்க சூப்பர் டிஷ்! நெய் சிக்கன் வறுவல் எப்படி செய்வது!

Suguna Devi P HT Tamil
Published Jun 07, 2025 10:10 AM IST

இந்த நாளில் அசைவ உணவுகள் செய்வது வழக்கமான ஒன்றாகும். வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கும் விருந்து கொடுப்பார்கள். இந்த நிலையில் பக்ரீத் நாளில் விருந்து உணவிற்கு ஏற்ற ஒரு உணவு என்றால் அது சிக்கன் தான். இன்று நெய் சிக்கன் வறுவல் செய்வது எப்படி என பார்க்கப்போகிறோம்.

பக்ரீத்திற்கு வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு செய்து கொடுக்க சூப்பர் டிஷ்! நெய் சிக்கன் வறுவல் எப்படி செய்வது!
பக்ரீத்திற்கு வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு செய்து கொடுக்க சூப்பர் டிஷ்! நெய் சிக்கன் வறுவல் எப்படி செய்வது!

தேவையான பொருட்கள்:

அரை கிலோ பொடியாக நறுக்கிய சிக்கன்

நெய் – 3-4 மேசைக்கரண்டி

வெங்காயம் – 1

பூண்டு இஞ்சி விழுது – 1 மேசைக்கரண்டி

மிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் – ¼ மேசைக்கரண்டி

கறிவேப்பிலை – சிறிது

உப்பு – தேவையான அளவு

தக்காளி – 1 (நறுக்கியது) (விருப்பமானால்)

புதினா – சிறிது (அலங்கரிக்க)

செய்முறை:

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடாக்க வேண்டும். நெய் சூடாகி உருகிய பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு இஞ்சி விழுது ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பின்னர் வெங்காயம் பொன்னிறமாகி வந்ததும், இதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

இப்போது பொடியாக நறுக்கி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும். மேலும் இதில் நெய் ஊற்றி சிக்கனை வறுக்க வேண்டும். இதில் சிக்கன் நன்றாக வறுபடும் வரை வறுக்க வேண்டும். இதில் நெய் பிரிந்து தனியாக வரும் வேளையில் சிக்கன் நன்றாக வறுபட்டது என எடுத்துக் கொள்ளலாம். கடைசி வேளையில் கறிவேப்பிலை, புதினா ஆகியவற்றை தூவி நன்கு கலக்கவும். இதனை சூடாக இருக்கும் போதே சாதம், சப்பாத்தி தோசை போன்ற பல உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம். உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு இதனை செய்து கொடுங்கள்.