சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு புதுசா ஒரு காமினேஷன்! அப்போ இந்த பூண்டு மிளகு காளான் ட்ரை பண்ணுங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு புதுசா ஒரு காமினேஷன்! அப்போ இந்த பூண்டு மிளகு காளான் ட்ரை பண்ணுங்க!

சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு புதுசா ஒரு காமினேஷன்! அப்போ இந்த பூண்டு மிளகு காளான் ட்ரை பண்ணுங்க!

Suguna Devi P HT Tamil
Published Jun 11, 2025 09:46 AM IST

பெரிய உயர்தர உணவகங்களில் பல விதமான இணை உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன. நீங்களும் புது விதமான சைட்டிஷ் வேண்டும் என்று நினைத்தால் இந்த பூண்டு மிளகு காளான் சிறந்த தேர்வாக இருக்கும். இன்று இந்த ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பூண்டு மிளகு காளான் எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு புதுசா ஒரு காமினேஷன்! அப்போ இந்தபூண்டு மிளகு காளான் ட்ரை பண்ணுங்க!
சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு புதுசா ஒரு காமினேஷன்! அப்போ இந்தபூண்டு மிளகு காளான் ட்ரை பண்ணுங்க!

தேவையான பொருட்கள்

காளான் - 500 கிராம்

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பில்லாத வெண்ணெய் - 4 க்யூப்ஸ்

வெங்காயம் - 2 நறுக்கியது

பூண்டு - 10 பற்கள் நறுக்கியது

இடித்த மிளகு & பூண்டு

உப்பு - 1 தேக்கரண்டி

மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

சில்லி பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி

சோயா சாஸ் - 1 தேக்கரண்டி

பச்சை குடைமிளகாய்

சிவப்பு குடைமிளகாய்

கொத்தமல்லி இலை நறுக்கியது

செய்முறை

முதலில் ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய், உப்பில்லாத வெண்ணெய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். வெண்ணெய் உருகியதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அடுத்து பூண்டு சேர்த்து வதக்கவும். பின்பு இடித்த மிளகு & பூண்டு சேர்த்து கலந்து விடவும்.

நன்கு கழுவிய காளானை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். பிறகு உப்பு, மிளகு தூள், சில்லி பிளேக்ஸ், சோயா சாஸ் சேர்த்து கலந்து விடவும். வெங்காயம், பச்சை குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும். அவ்வளவு தான் சுவையான பூண்டு மிளகு காளான் தயார்.