Cheese Bread Omelette: சுவையான பிரெஞ்சு ஸ்டைல் சீஸ் பிரெட் ஆம்லேட்! ஈசியா செய்யலாம்! சூப்பாரான ரெசிபி இதோ!
Cheese Bread Omelette: நம் நாட்டு உணவுகளில் பல ருசியான வகைகள் இருந்தாலும் நம் மக்களுக்கு சில சமயங்களில் வெளிநாட்டு உணவுகள் மீது அலாதியான பிரியம் உண்டாகிறது. இதற்கு காரணம் அந்த உணவை ருசித்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருப்பதே ஆகும்.

நம் நாட்டு உணவுகளில் பல ருசியான வகைகள் இருந்தாலும் நம் மக்களுக்கு சில சமயங்களில் வெளிநாட்டு உணவுகள் மீது அலாதியான பிரியம் உண்டாகிறது. இதற்கு காரணம் அந்த உணவை ருசித்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருப்பதே ஆகும். மேலும் மேலைநாட்டு உணவுகளின் சுவை நம் நாட்டு உணவுகளை காட்டிலும் சற்று வித்தியாசமாகவும் அதிக சுவையுடனும் இருப்பதும் உண்மையே. அந்த வகையில் பிரெஞ்சு வகை உணவுகள் இன்று நம் ஊர்களில் அதிகமாக உள்ளது. இந்த வகை உணவுகளை தயாரிக்கும் போது பல வித்தியாசமான பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் இது கடினமான காரியம் இல்லை. பிரெஞ்சு ஸ்டைலில் சீஸ் பிரெட் ஆம்லேட் செய்வது என இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
5 முதல் 6 பிரெட் துண்டுகள்
ஒரு கப் கடலை மாவு
அரை கப் மைதா மாவு
1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர்
2 பெரிய வெங்காயம்
3 தக்காளி
2 டீஸ்பூன் வறமிளகாய் தூள்
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
ஒரு டீஸ்பூன் மிளகு தூள்
ஒரு டீஸ்பூன் சில்லி ஃப்ளெக்ஸ்
அரை டீஸ்பூன் தூள் உப்பு
சீஸ் துண்டுகள்
சிறதளவு கொத்தமல்லி தழை
சிறிதளவு கறிவேப்பிலை
4 டீஸ்பூன் வெண்ணெய்
4 டீஸ்பூன் நெய்
2 டீஸ்பூன் சமையல் எண்ணெய்..
செய்முறை
முதலில் தேவையான பிரெட் துண்டுகள் எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மேலும் தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இதே போல கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். தேவையான அளவு சீஸ் எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு பாத்திரத்திகள் கடலை மாவு, மைதா மாவு, பேக்கிங் பவுடர், வற மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் மிளகுத்தூள் மற்றும் அரை டீஸ்பூன் சில்லி பிளேக்ஸ் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வைக்க வேண்டும். மேலும் இதில் இரண்டு கப் அளவு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். பிறகு நறுக்கிய தக்காளி மற்றும் வெங்காயத்தை இதில் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இப்பொழுது ஒரு தவா அல்லது தோசை கல்லாய் அடுப்பில் வைத்து சூடானவுடன் அதில் வெண்ணை தடவிக் கொள்ளவும். வெண்ணெய் இல்லை என்றால் நெய் அல்லது எண்ணெய் ஊற்றிக் கொள்ளலாம். பிறகு ஒரு பிரெட்டை நாம் கரைத்து வைத்த மாவில் உள்ளே விட்டு நனைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இதன் மேலே சீஸ் லேயர் வைத்து அதன் மேல் கடலை மாவை பரவலாக கலந்து விடவும். அப்படியே எடுத்து சூடான தோசை கல்லில் வைக்கவும். மேலே ஸ்டப்பிங் போல கொஞ்சம் வெங்காயம் தக்காளி சில்லி ஃப்ளேக்ஸ் கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து மிதமான தீயில் வேக விடவும். ஓருபுறம் நன்கு வேக வைத்தவுடன் மறுபடியும் திருப்பி போட்டு லேசாக வெண்ணை அல்லது நெய் விடவும். இரண்டு புறமும் நன்கு சிவந்து வந்த பின் சாசுடன் பரிமாறவும். சுவையான சீஸ் பிரெட் ஆம்லேட் ரெடி.

டாபிக்ஸ்