நா ஊற வைக்கும் மீன் கோலா உருண்டை! இனி ஈசியா செய்யலாம்! இதோ பக்கா ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  நா ஊற வைக்கும் மீன் கோலா உருண்டை! இனி ஈசியா செய்யலாம்! இதோ பக்கா ரெசிபி!

நா ஊற வைக்கும் மீன் கோலா உருண்டை! இனி ஈசியா செய்யலாம்! இதோ பக்கா ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Dec 19, 2024 11:04 AM IST

அசைவ உணவுகள் என்றால் எல்லாருக்கும் மிகவும் பிடிக்கும் உணவு வகையாகும். அதிலும் மீன் வகை உணவுகல் மிகவும் ருசியாகவும் இருக்கும். கடல் மீன்கள் ஒரு சுவை என்றால் ஆத்து மீன்களும் ஒரு வித சுவையுடன் இருக்கும்.

நா ஊற வைக்கும் மீன் கோலா உருண்டை! இனி ஈசியா செய்யலாம்! இதோ பக்கா ரெசிபி!
நா ஊற வைக்கும் மீன் கோலா உருண்டை! இனி ஈசியா செய்யலாம்! இதோ பக்கா ரெசிபி!

தேவையான பொருட்கள்

அரை கிலோ வஞ்சிரம் மீன்

4 பிரட்

2 டேபிள்ஸ்பூன் சோள மாவு

1 பெரிய வெங்காயம்

5 பல் பூண்டு

சிறிய துண்டு இஞ்சி

அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்

சிறிதளவு மிளகு தூள்

தேவையான அளவு மிளகாய் தூள்

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு உப்பு

சிறிதளவு கொத்தமல்லி

செய்முறை

முதலில் மீன் துண்டுகளை உப்பு, மஞ்சள் தூள் போட்டு நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும். பின்னர் பிரட் துண்டுகளை டோஸ்ட் செய்து மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த உருளைக் கிழங்கு ஆறியதும் தோலை உரித்து மசித்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விடவும். அடுத்து அதில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய வைத்திருக்கும் மீனை போட்டு வேக விடவும். பிறகு அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சிறிது நேரம் ஆற விட்டு பின்பு அதை சிறு சிறு துண்டுகளாக ந பிரித்து போட்டு அதில் இருக்கும் முள்ளை எடுத்து விடவும். அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

எண்ணெய் சுட்ட பின் அதில் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். பின் அதில் நறுக்கிய  இஞ்சி மற்றும் பூண்டை போட்டு வதக்கவும். இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில்  மீனை போட்டு நன்கு கலந்து விடவும். இதில் மிளகு தூள், மிளகாய் தூள்,  உப்பு போட்டு கலக்கவும். பின்னர் அதில் மசித்த உருளைக்கிழங்கை போடவும். கிளறி வேக விடவும். அது வெந்ததும் அதில் சிறிதளவு கொத்தமல்லியை தூவி அடுப்பை அணைத்து விடவும். ஒரு அகன்ற பாத்திரத்தில் சோள மாவு, தண்ணீரை ஊற்றி கரைக்கவும்.  மீன் கலவை ஆறியதும்  உருண்டைகளாக உருட்டி சோள மாவு கரைசலில் போட்டு பின்பு  bread crumbs ல் போட்டு எடுக்கவும். அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். சூடானதும் அதில் உருண்டைகளை ஒவ்வொன்றாக போடவும். இரு புறமும் பொன்னிறமாக மாறியதும் எடுத்து எண்ணெய் வடிய விட வேண்டும். சூடான மற்றும் சுவையான மீன் கோலா உருண்டை தயார். 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.