எந்த மீனாக இருந்தாலும் இந்த மாதிரி செஞ்சு பாருங்க! அசத்தலான மீன் வறுவல் மசாலா! ஈசி ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  எந்த மீனாக இருந்தாலும் இந்த மாதிரி செஞ்சு பாருங்க! அசத்தலான மீன் வறுவல் மசாலா! ஈசி ரெசிபி!

எந்த மீனாக இருந்தாலும் இந்த மாதிரி செஞ்சு பாருங்க! அசத்தலான மீன் வறுவல் மசாலா! ஈசி ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Nov 26, 2024 02:54 PM IST

கடைகளில் செய்யப்படும் மீன் வறுவலை போல வீட்டிலேயே எளிமையாக செய்ய முடியும். இந்த வறுவல் மசாலாவை வைத்து எல்லா விதமான மீன்களையும் ருசியானதாக மாற்ற முடியும். சுவையான மீன் வறுவல் மசாலா செய்யும் முறையை இங்கு காண்போம்.

எந்த மீனாக இருந்தாலும் இந்த மாதிரி செஞ்சு பாருங்க! அசத்தலான மீன் வறுவல் மசாலா! ஈசி ரெசிபி!
எந்த மீனாக இருந்தாலும் இந்த மாதிரி செஞ்சு பாருங்க! அசத்தலான மீன் வறுவல் மசாலா! ஈசி ரெசிபி! (Pixabay)

தேவையான பொருட்கள்

அரை கிலோ மீன்

3 பல் பூண்டு 

1 துண்டு இஞ்சி

அரை எலுமிச்சம் பழம்

அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள்

1 டேபிள்ஸ்பூன் மல்லி தூள்

அரை டேபிள்ஸ்பூன் கரம் மசாலா

1 டீஸ்பூன் மிளகு தூள்

தேவையான அளவு மிளகாய் தூள்

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு உப்பு

சிறிதளவு கொத்தமல்லி

சிறிதளவு கறிவேப்பிலை

செய்முறை

முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை துண்டுகளாக்கி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு அகன்ற பாத்திரத்தை எடுத்து அதில் நைசாக அரைத்த இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா, பிழிந்த  எலுமிச்சை சாறு, நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி, மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விடவும். பின்பு துண்டுகளாக ஆக்கி வைத்திருக்கும் மீனை எடுத்து இந்த மசாலாவில் போட்டு அதை கைகளின் மூலம் நன்கு கலந்து விட்டு அதை சுமார் 45 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை அப்படியே ஊற விடவும். இதனை வெயிலிலோ அல்லது குளிர்சாதனப் பெட்டியிலோ ஊற விட வேண்டும். 

பின்னர் மீன் நன்கு ஊறியதும் ஒரு கடாயை எடுத்து மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 3 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும். எண்ணெய் சுட்ட பின் கடாயின் அளவிற்கேற்ப அதில் ஊற வைத்திருக்கும் மீனை எடுத்து ஒவ்வொன்றாக பக்குவமாக வைத்து அதை நன்கு வேக விடவும். சில  நிமிடத்திற்கு பிறகு அடுப்பை முற்றிலுமாக குறைத்து வைத்து மீனை மீண்டும் எல்லா பக்கமும் வேகும் வரை வேக விட வேண்டும். 3 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை மிதமான சூட்டிற்கு மாற்றி மீனை திருப்பி போட்டு அதை சுமார் 3 நிமிடம் வரை வேக விடவும். 3 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை முற்றிலுமாக குறைத்து வைத்து மீனை மீண்டும் 3 நிமிடம் வேக விடவும். 3 நிமிடத்திற்கு பிறகு மீனை மீண்டும் இரு புறமும் திருப்பி போட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வேக விட்டு பின்பு எடுத்து அதை ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும். இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அசத்தலாக இருக்கும் மீன் வறுவல் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.