வீட்ல முட்டை இருக்கா! அப்போ இத செஞ்சு பாருங்க! அருமையான முட்டை ஸ்நாக்ஸ் செய்வது எப்படி?
மாலை நேரம் வந்து விட்டாலே சூடான டீயுடன் ஏதேனும் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் எனத் தோன்றும். பள்ளிகளில் இருந்து வரும் குழந்தைகள் முதல் அலுவலகத்தில் இருந்து வரும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு சிற்றுண்டி செய்து தர வேண்டும்.
மாலை நேரம் வந்து விட்டாலே சூடான டீயுடன் ஏதேனும் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் எனத் தோன்றும். பள்ளிகளில் இருந்து வரும் குழந்தைகள் முதல் அலுவலகத்தில் இருந்து வரும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு சிற்றுண்டி செய்து தர வேண்டும். அப்படிப்பட்ட ஒன்றை அதிகம் புரதம் உள்ள முட்டையில் இருந்தே எளிமையாக செய்யலாம். முட்டை பான்கேக் தான் அது. மிகவும் சுவையான தேர்வாக அமையும். இந்த முட்டை பான்கேக் செய்யும் எளிய முறையை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
4 முட்டை
கால் லிட்டர் காய்ச்சி ஆற வைத்த பால்
1 டீஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ்
அரை கப் மைதா மாவு
கால் டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
தேவையான அளவு உப்பு
கால் கிலோ சர்க்கரை
தேவையான அளவு எண்ணெய்
செய்முறை:
முதலில் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் வெள்ளை பாகத்தை தனி தனியாக பிரித்து வைக்க வேண்டும். பின்னர் முட்டையின் வெள்ளை பாகத்தை பிரிட்ஜில் வைத்து விடவும். பிறகு முட்டையின் மஞ்சள் கருவை நன்றாக பீட் செய்ய வேண்டும். உங்களிடம் பீட்டர் இல்லையென்றால் கரண்டியை வைத்தும் காலக்கலாம். அது நன்றாக கலக்கும் வரை கிளற வேண்டும். மேலும் அதனுடன் காய்ச்சி ஆறவைத்த பாலை சேர்த்து கலக்க வேண்டும். பின்னர் இதில் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலந்து விடவும்.
அடுத்து இந்த கலவையில் மைதா மாவு, சிறிதளவு பேக்கிங் பவுடர் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அடுத்ததாக நாம் பிரிட்ஜில் வைத்த முட்டையின் வெள்ளை பாகத்தை எடுத்து பீட் செய்ய வேண்டும். இதனுடன் சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்து பீட் செய்ய வேண்டும். பின்பு பீட் செய்த வெள்ளைக் கரு கலவையுடன் முன்னதாக பீட் செய்து வைத்திருந்த மஞ்சள் கரு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து மெதுவாக கலந்து விட வேண்டும். பின்னர் ஒரு தோசை சட்டி அல்லது ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் எண்ணெய் தடவ வேண்டும். கடாயில் அதிகமாக உள்ள எண்ணெய்யை துடைத்து எடுக்கவும். அடுத்து பான்கேக் கலவையை சிறிது சிறிதாக ஊற்றி, பானின் ஓரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றவும். பின்பு பானை மூடி குறைந்த தீயில் 2 நிமிடம் வேகவிடவும். அடுத்து பானை திறந்து சிறிதளவு பான்கேக் கலவை, சிறிதளவு தண்ணீர் ஊற்றி பானை மூடி குறைந்த தீயில் 2 நிமிடம் மீண்டும் வேகவிட வேண்டும். பிறகு பான்கேக்கை மறுபுறம் திருப்பி சிறிதளவு தண்ணீர் ஊற்றி பானை மூடி குறைந்த தீயில் 2 நிமிடம் மீண்டும் வேகவிட வேண்டும். இப்பொழுது பானில் இருந்து கேக்கை எடுத்து தட்டில் வைத்து மேலே வெண்ணெய் மற்றும் தேன் ஊற்றி சூடாக பரிமாறவும். அருமையான மற்றும் சுவையான முட்டை பான்கேக் தயார். இதனை செய்து கொடுக்கும் போது குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
டாபிக்ஸ்