காரசாரமான கருணைக்கிழங்கு வறுவல்! எல்லாத்துக்கும் சூப்பரான சைடிஷ் இது தான்! அசத்தலான ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  காரசாரமான கருணைக்கிழங்கு வறுவல்! எல்லாத்துக்கும் சூப்பரான சைடிஷ் இது தான்! அசத்தலான ரெசிபி!

காரசாரமான கருணைக்கிழங்கு வறுவல்! எல்லாத்துக்கும் சூப்பரான சைடிஷ் இது தான்! அசத்தலான ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Jan 04, 2025 01:19 PM IST

கிழங்கு வகைகள் எப்போதும் உடலுக்கு மிகுந்த நன்மையை அளிக்கக்கூடிய ஒரு உணவுப் பொருளாகும். அதிலும் குறிப்பாக கருணை கிழங்கு உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

காரசாரமான கருணைக்கிழங்கு வறுவல்! எல்லாத்துக்கும் சூப்பரான சைடிஷ் இது தான்! அசத்தலான ரெசிபி!
காரசாரமான கருணைக்கிழங்கு வறுவல்! எல்லாத்துக்கும் சூப்பரான சைடிஷ் இது தான்! அசத்தலான ரெசிபி! (Cookpad)

தேவையான பொருட்கள்

அரை கிலோ கருணைக்கிழங்கு 

2 கப் மோர்

1 டீஸ்பூன் மஞ்சள் தூள் 

அரை டீஸ்பூன் உப்பு 

3 டீஸ்பூன் அரிசி மாவு

1 டீஸ்பூன் மிளகாய் தூள்

1 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்

அரை டீஸ்பூன் மிளகு தூள் 

2 டீஸ்பூன் சீரக தூள்

3 டீஸ்பூன் தனியா தூள்

1 டீஸ்பூன் சோம்பு தூள் 

1 டீஸ்பூன் கரம் மசாலா தூள் 

1 டீஸ்பூன் உப்பு 

1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது 

அரை எலுமிச்சை பழச்சாறு

தேவையான அளவு தண்ணீர்

தேவையான அளவு எண்ணெய் 

செய்முறை:

 முதலில் கருணைக்கிழங்கை தோல் சீவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த கருணைக் கிழங்கை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மோர் விட்டு கழுவி தனியே வைக்க வேண்டும். அடுத்து ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் கருணைக் கிழங்கை தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். இந்த கிழங்கு நன்றாக வெந்த பின்னர் தண்ணீரை வடிக்கத்திக் கொள்ள வேண்டும். மேலும் கிழங்கு துண்டுகளை முழுமையாக ஆற விடவும். பின்னர் வறுவல் செய்வதற்கு தேவையான மசாலா கலவையை செய்ய வேண்டும். 

மசாலா கலவைக்கு ஒரு பெரிய தட்டில் அரிசி மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மிளகு தூள், சீரக தூள், கொத்தமல்லி தூள், சோம்பு தூள், கரம் மசாலா தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வேக வைத்து எடுத்த கிழங்கு துண்டுகளை இந்த மசாலா கலவையுடன் சேர்த்து கலந்து விடவும்.இதனை ஒரு பெரிய தட்டில் தனியாக எடுத்து வைத்து பத்து நிமிடங்கள் அதை ஊறவிட வேண்டும். பிறகு ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் தவாவில் ஊற வைத்துள்ள கருணைக்கிழங்கை சேர்த்து இருபுறமும் பொன்னிறமாக மாறும் வரை வறுக்க வேண்டும். இப்பொழுது சுவையான மற்றும் மிருதுவான கருணைக்கிழங்கு வறுவல் ரெடி. அணைத்து குழம்பு வகைகளுக்கும் இந்த கருணைக் கிழங்கு வறுவல் சூப்பராக இருக்கும். உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.