சப்பாத்திக்கு தொட்டு கொள்ள ஒரு சூப்பர் தொக்கு செய்யலாமா? இதோ முட்டை தக்காளி தொக்கு ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சப்பாத்திக்கு தொட்டு கொள்ள ஒரு சூப்பர் தொக்கு செய்யலாமா? இதோ முட்டை தக்காளி தொக்கு ரெசிபி!

சப்பாத்திக்கு தொட்டு கொள்ள ஒரு சூப்பர் தொக்கு செய்யலாமா? இதோ முட்டை தக்காளி தொக்கு ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Published Jun 07, 2025 04:06 PM IST

சப்பாத்திக்கு குழம்பு, கிரேவி போன்றவை போலவே தொக்கும் ஒரு சிறப்பான காமினேஷன் ஆகும். அந்த வரிசையில் இன்று முட்டை தக்காளி தொக்கு செய்வது எப்படி என்பதை இங்கு தெரிந்துக் கொள்ளுங்கள்.

சப்பாத்திக்கு தொட்டு கொள்ள ஒரு சூப்பர் தொக்கு செய்யலாமா? இதோ முட்டை தக்காளி தொக்கு ரெசிபி!
சப்பாத்திக்கு தொட்டு கொள்ள ஒரு சூப்பர் தொக்கு செய்யலாமா? இதோ முட்டை தக்காளி தொக்கு ரெசிபி!

தேவையான பொருட்கள்

முட்டை - 6

எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

மசாலா பொருட்கள் - (பட்டை, 4 ஏலக்காய், 4 கிராம்பு, சீரகம்)

வெங்காயம் - 3 (நறுக்கியது)

பச்சை மிளகாய் - 4 (நடுவில் கீறியது)

மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

தக்காளி ப்யூரி - 1 (ஒரு தக்காளியைக் குழைத்து தயாரிக்கவும்)

தக்காளி - 3 (நறுக்கியது)

மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்

காஷ்மீரி மிளகாய்தூள் - 2 டீஸ்பூன்

கொத்தமல்லித்தூள் - 2 டீஸ்பூன்

உப்பு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

தண்ணீர் - தேவையான அளவு

கொத்தமல்லி - அலங்காரத்திற்கு

செய்முறை:

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, சீரகம் சேர்த்து நறுமணம் வரும் வரை வதக்கவும். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். மேலும் மிளகுத்தூள், இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு கிளறவும். தக்காளி ப்யூரி சேர்த்து கிளறி, பின் நறுக்கிய தக்காளியை சேர்த்து மொத்தமாக கலந்து விடவும்.. மஞ்சள்தூள், காஷ்மீரி மிளகாய்தூள், கொத்தமல்லித்தூள், உப்பு சேர்த்து, கறிவேப்பிலையுடன் கலந்து விடவும்.

1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் வேகவிடவும். வேகவைத்த முட்டைகளில் சிறிய கீறல் போட்டு, கறியுடன் நன்கு புரட்டி 5 நிமிடம் சிம்மில் வைத்துக்கொள்ளவும். கடைசியாக, கரம் மசாலா தூவி, கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும். சூடாக பரிமாறவும்! இது சாதத்திற்கும், சப்பாத்திக்கும் ஏற்ற கிரேவி.