மார்னிங் பிரேக்பாஸ்ட் முட்டை மசாலா சாண்ட்விச் செய்வது எப்படி? பக்கா ரெசிபி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மார்னிங் பிரேக்பாஸ்ட் முட்டை மசாலா சாண்ட்விச் செய்வது எப்படி? பக்கா ரெசிபி?

மார்னிங் பிரேக்பாஸ்ட் முட்டை மசாலா சாண்ட்விச் செய்வது எப்படி? பக்கா ரெசிபி?

Suguna Devi P HT Tamil
Nov 14, 2024 02:02 PM IST

காய்கறிகளை சேர்த்தும் செய்யும் சாண்ட்விச்கள் இருக்கின்றன. தற்போது முட்டை வைத்து செய்யும் சாண்ட்விச் செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.

மார்னிங் பிரேக்பாஸ்ட் முட்டை மசாலா சாண்ட்விச் செய்வது எப்படி? பக்கா ரெசிபி?
மார்னிங் பிரேக்பாஸ்ட் முட்டை மசாலா சாண்ட்விச் செய்வது எப்படி? பக்கா ரெசிபி?

தேவையான பொருட்கள்

6 முட்டை

4 பிரட்

3 தக்காளி

1 குடை மிளகாய்

3 பச்சை மிளகாய்

5 பல் பூண்டு

1 துண்டு இஞ்சி

எலுமிச்சம் பழம்

1 டேபிள்ஸ்பூன் சீரகம்

1 டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள்

1 டேபிள்ஸ்பூன் மல்லி தூள்

1 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா

1 டேபிள்ஸ்பூன் சாண்ட்விச் மசாலா

தேவையான அளவு மிளகாய் தூள்

தேவையான அளவு வெண்ணெய்

தேவையான அளவு சீஸ்

தேவையான அளவு உப்பு

தேவையான அளவு எண்ணெய்

சிறிதளவு கொத்தமல்லி

சிறிதளவு புதினா

செய்முறை

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய  வெங்காயம், கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய்,  பூண்டு, இஞ்சி, எலுமிச்சை சாறு, மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும். அடுத்து 6 முட்டைகளையும் நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். முட்டையை சிறிது நேரம் ஆற விட்டு பின்பு அதன் கூடை உரித்து அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும். இப்பொழுது ஒருகடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சுட்டதும் அதில் சீரகத்தை போட்டு வதக்கவும். பிறகு அதில்  நறுக்கிய வெங்காயத்தை போட்டு  வதக்கவும். பின் அதில்இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் நறுக்கிய பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.

 இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மல்லி தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சிறிது நேரம் வதக்கவும். பிறகு அதில் தண்ணீர் ஊற்ற வேண்டும். மேலும் அதில் நறுக்கிய முட்டை துண்டுகளை போட்டு மசலாவோடு சேர்த்து கிளறவும். பின்பு அதில் கரம் மசாலா, மற்றும் கொத்தமல்லியை போட்டு அதை நன்கு கிளறி விட்டு வேக விடவும். பின்னர் இந்த மசாலாவை ஆற வைக்கவும். பிறகு ஒரு பிரட்டை எடுத்து அதில் வெண்ணெய் மற்றும்  புதினா சட்னியை தடவி அதில்  முட்டை கலவை, வட்ட வடிவில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, மற்றும் குடை மிளகாய்யை வைக்கவும். பின்பு அதில் சிறிதளவு சாண்ட்விச் மசாலா மற்றும் சீஸை துருவி போட்டு பிறகு இன்னொரு பிரட்டை எடுத்து அதில் வெண்ணெய்யை தடவி அதன் மேல் வைத்து அதை லேசாக அழுத்தி விடவும். ஒரு கடாயில் வெண்ணெய் தடவி இந்த பிரட்டை வைத்து இரு புறமும் நன்கு வேகும் வரை வேக விட வேண்டும். இதனை எடுத்து சாஸ் உடன் பரிமாற வேண்டும். சுவையான முட்டை மசாலா சாண்ட்விச் தயார். 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.