Bachelors Khushka: பேச்சுலர்ஸ் கூட செய்யலாம் இந்த ஈசி குஸ்காவ! இப்பவே ட்ரை பண்ணி பாருங்க!
Bachelors Khushka: சமையல் என்பது வாழ்வதற்கான ஒரு திறன் மட்டுமே. எனவே அனைவரும் இதனை முறையாக கற்றுக் கொள்ள வேண்டும். அனைவரும் ஈஸியாக செய்யக்கூடிய ஒரு உணவை உங்களுக்கு செய்யத் தெரியுமா. இதோ பேச்சுலர்ஸ் ஈஸியாக செய்யக்கூடிய குஸ்கா செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.

நாம் வீட்டில் இருக்கும் போது பெற்றோர்கள் வித விதமாக சமையல் செய்து கொடுப்பார்கள். ஆனால் வேலை நிமித்தமாகவோ, படிப்பதற்காகவோ நாம் வெளியூருக்கு செல்லும் போது வீட்டு சாப்பாட்டை அதிகம் மிஸ் செய்வோம். அதற்கு காரணம் நமக்கு சரியாக சமைக்கத் தெரியாது. ஆனால் சமையல் என்பது வாழ்வதற்கான ஒரு திறன் மட்டுமே. எனவே அனைவரும் இதனை முறையாக கற்றுக் கொள்ள வேண்டும். அனைவரும் ஈஸியாக செய்யக்கூடிய ஒரு உணவை உங்களுக்கு செய்யத் தெரியுமா. இதோ பேச்சுலர்ஸ் ஈஸியாக செய்யக்கூடிய குஸ்கா செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
ஒரு கப் பாசுமதி அரிசி
கால் கப் கடலைப் பருப்பு
5 டீஸ்பூன் எண்ணெய்
5 டீஸ்பூன் வெண்ணெய்
ஒரு பட்டை
ஒரு ஏலக்காய்
2 கிராம்பு
2 பெரிய வெங்காயம்
2 தக்காளி
2 பச்சை மிளகாய்
ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
சிறிதளவு புதினா
ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லித் தழை
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
அரை கப் தயிர்
1 சிறிய எலுமிச்சம் பழம்
தேவையான அளவு உப்பு
செய்முறை
முதலில் அரிசி மற்றும் கடலைப் பருப்பை நன்றாக கழுவி சுத்தம் செய்து குறைந்தது அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பாசுமதி அரிசி இல்லையென்றால் வேறு அரிசையையும் பயன்படுத்தலாம். இப்பொழுதிக்கு ஒரு குக்கரை எடுத்து அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் மற்றும் வெண்ணெயை ஊற்றி சூடாக்கவேண்டும். இவை சூடானதும் இதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கி விட வேண்டும். வறுபட்டதும் அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி விடவும். வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி விடவேண்டும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். இதன் பச்சை வாசனை போனதும் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை போட வேண்டும்.
தக்காளி நன்கு வதங்கிய பின்னர் அதில் மஞ்சள் தூள், பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா, மற்றும் தயிர் சேர்த்து வதக்கி விடவும். பின்னர் அரிசியின் அளவை காட்டிலும் மூன்று மடங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்து வரும் வேளையில் அதில் ஊறவைத்த அரிசி மற்றும் கடலை பருப்பை போட வேண்டும். மேலும் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, எலுமிச்சை சாறு சேர்த்து அரிசி குக்கரில் வேக விட வேண்டும். இதனை ரைஸ் குக்காரிலும் செய்யலாம். குக்கரில் 3 முதல் 4 விசில் வரவும் இறக்கி விட வேண்டும். விசில் அடங்கியதும் குக்கரை திறக்கவும். கமகமக்கும், சூடான குஸ்கா தயார். இதனுடன் ஒரு முட்டையை அவித்தும் சாப்பிடலாம். ரைஸ் குக்கரில் சாதம் வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான குஸ்கா ரெடி. இது மிகவும் சுவையானதாக இருக்கும். நீங்களும் செய்து பார்த்து உங்கள் நண்பர்களுக்கு கொடுத்து மகிழுங்கள். யார் வேண்டுமானாலும் இந்த குஸ்காவை செய்யலாம். இது அவ்வளவு எலிமையக்கா செய்யக்கூடிய சமையல் ஆகும்.

டாபிக்ஸ்