இரும்புசத்து அளிக்கும் முருங்கைக்கீரை சப்பாத்தி செய்வது எப்படி! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க! ஈசி ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  இரும்புசத்து அளிக்கும் முருங்கைக்கீரை சப்பாத்தி செய்வது எப்படி! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க! ஈசி ரெசிபி!

இரும்புசத்து அளிக்கும் முருங்கைக்கீரை சப்பாத்தி செய்வது எப்படி! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க! ஈசி ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Dec 08, 2024 12:18 PM IST

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரும்புசத்து மிக அவசியமான ஒன்றாகும். இத்தகைய இரும்புசத்தை அளிக்கக்கூடிய உணவுகளில் முதன்மையான இடம் முருங்கைக்கீரைக்கு உண்டு. இதனை வாரம் இருமுறை அல்லது அதற்கும் மேலாக உணவில் சேர்த்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

இரும்புசத்து அளிக்கும் முருங்கைக்கீரை சப்பாத்தி செய்வது எப்படி! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க! ஈசி ரெசிபி!
இரும்புசத்து அளிக்கும் முருங்கைக்கீரை சப்பாத்தி செய்வது எப்படி! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க! ஈசி ரெசிபி! (Cookpad)

தேவையான பொருட்கள்

2 கப் முருங்கைக்கீரை

3 கப் கோதுமை மாவு 

சிறிய துண்டு இஞ்சி

2 பச்சை மிளகாய்

அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்

அரை டீஸ்பூன் மிளகாய் தூள் 

அரை டீஸ்பூன் கொத்தமல்லி தூள்

அரை டீஸ்பூன் சீரக தூள்

ஒரு டீஸ்பூன் ஓமம்

தேவையான அளவு உப்பு

தேவையான அளவு தண்ணீர்

தேவையான அளவு நெய்

செய்முறை

முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவை போட வேண்டும். பின்னர் அதனுடன் துருவிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சீரக தூள், உப்பு, ஓமம், எண்ணெய் மற்றும் முருங்கை இலை ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின்னர் முருங்கைக் கீரை இலைகளை நறுக்கி மாவுடன் சேர்த்தும் கலக்க வேண்டும். இப்பொழுது இந்த மாவுக் கலவையில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி மாவை கிளறி விடவேண்டும்.  இதனை நன்றாக சேர்த்து பிசைய வேண்டும். மெதுவாக பிசைந்து பின்னர் இந்த மாவை ஒரு 10 நிமிடங்கள் ஊற விட வேண்டும். பின்னர் நன்றாக ஊறிய மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த உருண்டைகளில் சிறிதளவு எண்ணெய் தடவி மூடி வைக்க வேண்டும். 

பின்னர் இந்த உருண்டைகளை எடுத்து அதில் மாவு தூவி, சப்பாத்தி தேய்க்கும் உருளையை வைத்து சம அளவிலான வட்டங்களாக தேய்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.  அனைத்து மாவு உருண்டைகளையும் இந்த முறையில் உருட்டவும். இப்பொழுது அடுப்பில் ஒரு தவா அல்லது தோசை சட்டியை வைத்து சூடாக்கி கொள்ள வேண்டும்.அந்த சட்டி நன்கு சூடானதும்,  தேய்த்து வைத்திருக்கும் சப்பாத்திகளை அதில் போட்டு சிறிதளவு எண்ணெய் தடவி ஒரு பக்கம் வேக விட வேண்டும். ஒரு புறம் வெந்த பின்னர், மறுபுறம் திருப்பி நெய் அல்லது எண்ணெய் தடவி வேகவிட வேண்டும்.  இருபுறமும் நன்கு வெந்ததும் தவாவில் இருந்து எடுட்து விட வேண்டும். இதே போல மற்ற சப்பாத்திகளையும் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த முருங்கை இலை சப்பாத்தியை கொஞ்சம் ஊறுகாய் அல்லது ஏதேனும் கிரேவி வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் உங்கள் வீட்டில் ட்ரை செய்து பார்த்து மகிழுங்கள். குழந்தைகளும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.