தாபா ஸ்டைல் ராஜ்மா கறி ரெசிபி! சப்பாத்தி முதல் சூடான சாதம் என எல்லா உணவிற்கும் சூப்பர் காமினேஷன் !
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தாபா ஸ்டைல் ராஜ்மா கறி ரெசிபி! சப்பாத்தி முதல் சூடான சாதம் என எல்லா உணவிற்கும் சூப்பர் காமினேஷன் !

தாபா ஸ்டைல் ராஜ்மா கறி ரெசிபி! சப்பாத்தி முதல் சூடான சாதம் என எல்லா உணவிற்கும் சூப்பர் காமினேஷன் !

Suguna Devi P HT Tamil
Published Jun 10, 2025 11:05 AM IST

ராஜ்மா வைத்து சுவையான பல உணவுகள் செய்யலாம். அந்த வரிசையில் நாம் இன்று சப்பாத்தி, சாதம் என அனைத்து விதமான உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுமாறு தாபா ஸ்டைலில் ராஜ்மா கறி எப்படி செய்வது என்பதை இங்கு காண்போம்.

தாபா ஸ்டைல் ராஜ்மா கறி ரெசிபி! சப்பாத்தி முதல் சூடான சாதம் என எல்லா உணவிற்கும் சூப்பர் காமினேஷன் !
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி ரெசிபி! சப்பாத்தி முதல் சூடான சாதம் என எல்லா உணவிற்கும் சூப்பர் காமினேஷன் !

தேவையான பொருட்கள்

தக்காளி - 4

ராஜ்மா - 1 கப் ஊறவைத்தது

தண்ணீர் - 3 கப்

உப்பு

காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

பிரியாணி இலை

பட்டை

கிராம்பு

ஏலக்காய்

எண்ணெய்

சீரகம் - 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 2

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

வெங்காயம் - 3 துருவிய

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

தனியா தூள் - 1 தேக்கரண்டி

சீரக தூள் - 1 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி

தண்ணீர்

கசூரி மேத்தி

கொத்தமல்லி இலை

நெய் - 2 மேசைக்கரண்டி

பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி

இஞ்சி

பச்சை மிளகாய் - 2

செய்முறை

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய தக்காளியை போட்டு அரைத்து ப்யூரியாக மாற்றவும். அரைத்த விழுதை வேறு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும். இப்பொழுது ராஜ்மாவை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற விடவும். ஊறிய பின்னர் ஒரு பிரஷர் குக்கர்ல, ஊற வைத்த ராஜ்மா, தண்ணீர், உப்பு, காஷ்மீர் மிளகாய் தூள், ப்ரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, பட்டை, எண்ணெய் சேர்க்கவும். பின்னர் குக்கரை மூடி நான்கு விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் மூன்று மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் இரண்டு வத்தல் மற்றும் ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்க்கவும். சீரகம் பொங்கியதும், ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு துருவிய வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் தங்கம் நிறமாக மாறும் வரை வதக்கவும். இப்போது அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும். ஒரு டீஸ்பூன் தனியா தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் சீரக தூள் சேர்த்து வெங்காய மசாலாவுடன் கலந்து வதக்கவும்.

அரைத்த தக்காளி ப்யூரி மற்றும் தேவையான உப்பும் சேர்த்து நன்றாக கிளறவும். வெந்த ராஜ்மாவை அதன் நீருடன் சேர்த்து, மசாலாவுடன் நன்றாக கிளறவும். ஒரு டீஸ்பூன் கரம் மசாலா தூளை சேர்த்து கிளறவும். மிதமான அடுப்பில் பாத்திரத்தை மூடி 15 நிமிடம் மசிய விடவும். பிறகு கொத்தமல்லி இலை மற்றும் நசுக்கிய கசூரி மெத்தியைச் சேர்க்கவும். ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி, அதில் ஒரு டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் பெருங்காயத் தூள், ஒரு டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், சில இஞ்சி ஜூலியன் துண்டுகள் மற்றும் இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து, இந்த தாளிப்பை மசாலாவிற்கு மேல் ஊற்றவும். சுவையான தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா தயார்! இதை வெந்த பாஸ்மதி சாதத்துடன் பரிமாறலாம்.