Nutritious flour Cake: சத்துமாவுல சூப்பாரான சுவையான கேக் செய்யலாம்! இதோ பக்காவான ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Nutritious Flour Cake: சத்துமாவுல சூப்பாரான சுவையான கேக் செய்யலாம்! இதோ பக்காவான ரெசிபி!

Nutritious flour Cake: சத்துமாவுல சூப்பாரான சுவையான கேக் செய்யலாம்! இதோ பக்காவான ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Jan 30, 2025 01:07 PM IST

Nutritious flour Cake: இனிப்பான கேக் என்றால் எந்த குழந்தைக்கு தான் பிடிக்காது. பெரும்பாலான குழந்தைகள் கேக் என்றால் மிகவும் விரும்புவர். இந்த கேக்கை சத்து மாவை வைத்து அசத்தலாக செய்ய முடியும். இதனை தெரிந்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக படியுங்கள்.

Nutritious flour Cake: சத்துமாவுல சூப்பாரான சுவையான கேக் செய்யலாம்! இதோ பக்காவான ரெசிபி!
Nutritious flour Cake: சத்துமாவுல சூப்பாரான சுவையான கேக் செய்யலாம்! இதோ பக்காவான ரெசிபி! (Cookpad)

தேவையான பொருட்கள் 

ஒரு கப் சத்துமாவு 

2 கப் வெண்ணெய் 

1 கப் வெல்லம் 

4 முட்டை 

அரை கப் மைதா மாவு 

அரை கப் கோதுமை மாவு 

2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்

1 டீஸ்பூன் பேக்கிங் சோடா

ஒரு சிட்டிகைஉப்பு

100 கிராம் கரகரப்பாக உடைத்த நட்ஸ்

செய்முறை 

முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் சத்துமாவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் கோதுமை மாவு மற்றும் மைதா மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். (கோதுமை அல்லது மைதா இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டும் கூட பயன்படுத்தலாம்) பின்னர் இந்த கலவையை கிளறி விட்டு ஒன்றாக்க வேண்டும். மேலும் இதில் சிறிதளவு உப்பு, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து மூன்று முறை சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து வெல்லம் கரையும் வரை கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விட்டு இளம் பாகு எடுத்து ஆறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

பின் முட்டை உடன் வெல்ல பாகை சேர்த்து நன்கு நுரை வரும் வரை அடிக்க வேண்டும். பின் உருக்கிய வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் சலித்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக தூவி நன்கு கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும். பின் இதன் மீது நொறுக்கிய நட்ஸ் மற்றும்  சிறிது மாவை தூவி கலந்து கொள்ளவும்.  பின் பட்டர் தடவி பட்டர் பேப்பர் போட்டு வெண்ணெய் தடவிய ட்ரேயில் கேக் மாவை நிரப்பி டேப் செய்யவும். பின் மேலே சிறிது நட்ஸ் சேர்த்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 10 நிமிடங்கள் வரை ஓவனை சூடாக்கவும். பின் சூடான ஓவனில் வைத்து 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 50_55 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். மேலும் இதனை குக்கரில் வைத்து கூட செய்து சாப்பிடலாம்.   சுவையான ஆரோக்கியமான மணமான சத்து மாவு கேக் ரெடி. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.