Dal Vada: சுட சுட பருப்பு வடை செய்யத் தெரியுமா? இதோ சிம்பிள் ரெசிபி! பக்காவா செய்யலாமே!
Dal Vada: சுத்தமான எண்ணெயில் வடை சுட்டு சாப்பிட்டால் தான் நல்லது. சிலருக்கு வீட்டிலேயே வடை சுடும் போது அது நன்றாக வராது. வடைகள் உடைந்து விடவும் வாய்ப்பு உள்ளது. எல்லாருக்கும் பிடித்த பருப்பு வடையை உதிராமல் பக்குவமாக செய்வது எப்படி என்பதை இங்கு காணலாம்.

மாலை நேரம் வந்து விட்டாலே சுட சுட டீயுடன் ஏதேனும் ஒரு ஸ்நாக்ஸ் சாப்பிடுவது வழக்கம். அதிலும் தமிழ்நாட்டில் உள்ள டீக்கடைகளில் காலையில் இருந்தே வடைகள் விற்கப்படுகின்றன. காலை நேர டீயுடன் இந்த வடையை சாப்பிட்டு செய்தி தாள் படித்தால் தான் நம்மூர் ஆட்களுக்கு அந்த நாள் தொடங்கும். அந்த அளவிற்கு வடை மீது அலாதியான பிரியம் இருந்து வருகிறது. கடைகளில் போடப்படும் வடைகளில் அதிக எண்ணெய் கலந்து இருக்கும். அந்த எண்ணெய் சுத்தம் இல்லாதவையாகவும் இருக்கும். எனவே சுத்தமான எண்ணெயில் வடை சுட்டு சாப்பிட்டால் தான் நல்லது. சிலருக்கு வீட்டிலேயே வடை சுடும் போது அது நன்றாக வராது. வடைகள் உடைந்து விடவும் வாய்ப்பு உள்ளது. எல்லாருக்கும் பிடித்த பருப்பு வடையை உதிராமல் பக்குவமாக செய்வது எப்படி என்பதை இங்கு காணலாம்.
தேவையான பொருள்கள்
அரை கப் கடலை பருப்பு
கால் கப் துவரம் பருப்பு
2 பெரிய வெங்காயம்
4 பச்சை மிளகாய்
2 வற மிளகாய்
கால் கப் கறிவேப்பில்லை
ஒரு டீஸ்பூன் பெருங்காயத் தூள்
தேவையான உப்பு
சுத்தமான எண்ணெய்
செய்முறை
முதலில் கடலை பருப்பையும், துவரம் பருப்பையும் தண்ணீர் ஊற்றி ஒன்றரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பருப்புகள் நன்றாக ஊறிய பின்னர் அதில் உள்ள கார்களை நீக்கி பின் கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றில் இருந்து ல் கால் கப் பருப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். மீதமுள்ள பருப்புகளை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அத்துடன் வற மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயத் தூள், உப்பு ஆகிவற்றை எல்லாம் சேர்த்து சற்று கொற கொறப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த மாவை ஒரு அகன்ற பாத்திரத்தில் போட வேண்டும், பின்னர் ஏற்கனவே தனியாக எடுத்து வைத்துள்ள பருப்பு மற்றும் நறுக்கிய வெங்காயத்தை அதே பாத்திரத்தில் போட்டு ஒன்றாக கிளறிவிடவும், அதனை சிறு உருண்டைகளாக பிடித்து, தட்டையாக தட்டி, ஒரு பாத்திரத்தில் அல்லது தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சுத்தமானஎண்ணெய்யை ஊற்றி காய விட வேண்டும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் தட்டி வைத்துள்ள வடைகளை ஒவ்வொன்றாகப் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்க வேண்டும். இதோ சுடச், சுட சுவையான பருப்பு வடை தயார்.
இந்த பருப்பு வடை அனைத்து தரப்பு வயதினருக்கும் ஏற்றதாகும். வீட்டிலேயே செய்யப்படுவதால் மிகுந்த சுவையுடனும், அதிக மொறு மொறுப்புடன் இருக்கும். அதிலும் சுத்தமான எண்ணெய் வைத்து இதனை சுடுவதால் ஆரோக்கியமான உணவாக இருக்கும். நீங்களும் உங்களது வீட்டில் இதனை செய்து பார்த்து மகிழுங்கள். சிறந்த சுவையுடன் இருப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் பருப்பில் புரோட்டீன் அதிகம் இருப்பதால் உடலுக்குத் தேவையான புரோட்டினையும் இது வழங்குகிறது.

டாபிக்ஸ்