இனி கஸ்டர்டு டிலைட் செய்வது கஷ்டமே இல்லை! இதோ ஈஸியான செய்முறை! இப்பவே செய்யலாம்!
சுவையான கஸ்டார்ட் டிலைட் மேலை நாடுகளில் பிரசித்தி பெற்ற உணவாகும். மேலை நாட்டு கலாச்சாரம் போலவே அதன் உணவுகள் மீதும் நம் மக்களுக்கு ஒரு தனிப் பிரியம் உண்டு. வீட்டிலேயே இந்த கஸ்டார்ட் டிலைட்டை செய்யலாம். இதனை செய்யும் எளிய முறையை இங்கு தெரிந்துக் கொள்ளுங்கள்.
டிசம்பர் மாத விடுமுறையில் குழந்தைகள் வீட்டில் உள்ளனர். அவர்களுக்கு வித்தியாசமாக ஏதேனும் ஒரு உணவவை செய்து தருவது கட்டாயமான ஒன்றாகும். இல்லையெனில் உடனே இவர்களது பார்வை ஆரோக்கியம் இல்லாத கடைகளில் விற்கக்கூடிய உணவுகள் பக்கம் திரும்பி விடும். எனவே குழந்தைகள் விரும்புமாறு வித்தியாசமான முறையில் உணவுகளை செய்து தர வேண்டும். ஆனால் அதில் பல சிக்கல்கள் உள்ளது. நாம் செய்யும் போது அந்த உணவு சரியான பதத்தில் வராது. எனவே இதனை செய்ய சற்று பொறுமை அவசியம். சுவையான கஸ்டார்ட் டிலைட் மேலை நாடுகளில் பிரசித்தி பெற்ற உணவாகும். மேலை நாட்டு கலாச்சாரம் போலவே அதன் உணவுகள் மீதும் நம் மக்களுக்கு ஒரு தனிப் பிரியம் உண்டு. வீட்டிலேயே இந்த கஸ்டார்ட் டிலைட்டை செய்யலாம். இதனை செய்யும் எளிய முறையை இங்கு தெரிந்துக் கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
1 லிட்டர் காய்ச்சி ஆறவைத்த பால்
25 முதல் 40 பிஸ்கட்
அரை கப் வெண்ணிலா கஸ்டர்டு பவுடர்
சிறிதளவு சாக்லேட் கனாஷ்
4 டேபிள்ஸ்பூன் சர்க்கரை
வாழைப்பழம் நறுக்கியது
விதையில்லாத திராட்சை
1 மாதுளை பழம்
1 ஆப்பிள் பழம்
1 டேபிள்ஸ்பூன் தேன்
4 டேபிள்ஸ்பூன் நெய்
செய்முறை
முதலிள் அனைத்து பிஸ்கட்கலையும் சிறு சிறு துண்டுகளாக உடைத்து ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த பிஸ்கட் பொடியை மிக்ஸி ஜாரிலிருந்து வேறு பாத்திரத்திற்கு மாற்றி அதில் நெய் சேர்த்து கலக்க வேண்டும். இவை நன்கு கலந்தவுடன் ஒரு சதுர அளவிலான கிண்ணத்தில் ஒரு லேயர் சமமாக பரப்பி 15 நிமிடம் பிரிட்ஜில் வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கஸ்டர்டு கலவைக்கு, ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைக்க வேண்டும். அந்த பால் முழுவதும் நன்கு கொதித்த பின்னர், அதில் கஸ்டர்டு பவுடரை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். அடுத்து இதில் சர்க்கரை சேர்த்து, நன்கு கலந்து, பாத்திரத்தை நீரில் வைத்து கஸ்டர்டு கலவையை முழுவதுமாக ஆறவைக்க வேண்டும்.
இப்பொழுது வேறு ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நறுக்கிய வாழைப்பழம், நறுக்கிய திராட்சை, மாதுளை விதைகள், நறுக்கிய ஆப்பிள் மற்றும் தேன் சேர்த்து கலக்கி விட வேண்டும். இப்போது அந்த கஸ்டர்டு கலவையை பிஸ்கட் லேயரில் ஊற்றி சமமாக பரப்பி விட வேண்டும். பின்னர் அதன் மேல் பழக் கலவையை சேர்த்து சமமாக பரப்பி மேலும் கூடுதலாக மீண்டும் கஸ்டர்டு கலவையை ஊற்ற வேண்டும். பின்னர் இவை அனைத்தையும் சமமாக பரப்பி 15 நிமிடம் பிரிட்ஜில் வைக்த்து எடுத்துக் கொள்ளவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு, சாக்லேட் கனாஷை அதில் ஊற்றி மற்றொரு 15 நிமிடங்களுக்கு பிரிட்ஜில் வைத்து எடுக்கவும். இப்பொழுது அருமையான கஸ்டர்டு டிலைட் தயார்.இதனை வீட்டில் உள்ள குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதில் பழம் சேர்த்து இருப்பதால் உடலுக்கும் நன்மை பயக்கும். நீங்களும் இதனை உங்களது வீடுகளில் ட்ரை செய்து பாருங்கள்.
டாபிக்ஸ்