Curry Leaves Powder: முடி உதிர்வைக் குறைக்கும் கறிவேப்பிலை பொடி! எப்படி செய்வது என தெரிந்துக் கொள்ளுங்கள்!
Curry Leaves Powder: முடி சம்மந்தமான பிரச்சனைகளை சரிப்படுத்த முதன்மையான பொருளாக பார்க்கப்படுவது கறிவேப்பிலை, இதனை தலை முடியில் நேரடியாகவே பயன்படுத்தலாம். அதற்கு நேரம் இல்லாதவர்கள் கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன்களைப் பெற முடியும்.

மாறி வரும் வாழ்க்கை முறையால் நமது உடலில் பல பிரச்சனைகள் உண்டாகின்றன. உடல் நல ஆரோக்கியத்தை பராமரிக்க பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. உலகின் மாசும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காற்று மாசுபட்டால் உடனடியாக பாதிக்கப்படுவது என்னவென்றால் அது தலைமுடி தான். தலைமுடியை பாதுகாப்பது என்பது பல நடைமுறைகள் உள்ளீட்ட செயல்முறையாகும். இந்த மாசு பாதிப்பால் தலை முடி உதிர்தல், வறண்டு போகுதல், நிறம் மாறுதல் என பல தொந்தரவுகள் வருகின்றன. இதனை தடுக்க சிலர் மருத்துவர்களின் உதவியை நாடுகின்றனர். ஆனால் மருத்துவ சிகிச்சை அதிக விலை மதிப்பான சிகிச்சைகளை கொண்டதாக இருக்கிறது. இதனை தவிர்த்து நாமே இயற்கை முறையிலான தீர்வை பெற வேண்டும்.
முடி சம்மந்தமான பிரச்சனைகளை சரிப்படுத்த முதன்மையான பொருளாக பார்க்கப்படுவது கறிவேப்பிலை, இதனை தலை முடியில் நேரடியாகவே பயன்படுத்தலாம். அதற்கு நேரம் இல்லாதவர்கள் கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன்களைப் பெற முடியும். ஆனால் உணவில் கறிவேப்பிலை இருந்தால் அதனை சாப்பிடாமல் தவிர்த்து விடுகிறோம். எனவே கறிவேப்பிலையை பொடி செய்து வைத்துக் கொண்டு தினம் தோறும் சாப்பிட்டு வர நல்ல பலன்களை பெற முடியும். எளிமையாக கறிவேப்பிலை பொடி செய்யும் முறையை இங்கு காண்போம்.
தேவையான பொருள்கள்
அரை கப் கறிவேப்பில்லை
2 டீஸ்பூன் துவரம் பருப்பு
2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
6 வற மிளகாய்
சிறிதளவு பெருங்காயம்
தேவையான அளவு உப்பு
செய்முறை:
முதலில் வற மிளகாய் மற்றும் பருப்புகளை எடுத்து காம்பினை நீக்கி, சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் கறிவேப்பிலையை போட்டு கருகி விடாமல் சிவப்பாக வரும் வரை வறுக்க வேண்டும். பின்னர இதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அதே கடாயில் காம்பு நீக்கிய வற மிளகாய், துவரம் மற்றும் உளுத்தம் பருப்புகள் மற்றும் பெருங்காயம் ஆகிய இவற்றையும் போட்டு தனித்தனியாக பொன்னிறமாக நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு மிகசியை எடுத்து அதில் முதலில் கறிவேப்பில்லையையும், உப்பையும் போட்டு நைசாக நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு வறுத்த வற மிளகாய், பருப்பு மற்றும் பெருங்காயம் என அனைத்தையும் ஆற வைத்து அதில் ஒன்றாக போட்டு மீண்டும் பொடி செய்து கொள்ள வேண்டும். இதோ இப்போது சுவையான கறிவேப்பில்லை பொடி தயார். இதனை சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். ஆயுர்வேத மருத்துவத்தில் கறிவேப்பிலை சிறந்த நோய் நிவாரணி. இது நீரிழிவை எதிர்க்கும், நுண்ணுயிர் கொல்லியாகும் எனக் கூறப்படுகிறது. கறிவேப்பிலை பொடியை இட்லி, தோசை போனறவற்றிற்கும் வைத்து சாப்பிடலாம்.
வீட்டில் குழம்பு செய்ய நேரம் இல்லாத போது இந்த பொடியினை மட்டும் வைத்து சாப்பிடலாம். இதனை அதிக அளவில் செய்து தண்ணீர் படாமல் ஏதேனும் பாட்டிலில் போட்டு மூடி வைக்க வேண்டும்.

டாபிக்ஸ்