நார்த் இந்தியன் ஸ்டைல் தயிர் பன்னீர்! எல்லாராலும் செய்யலாம்! பக்காவான ரெசிபி!
தமிழக மக்களுக்கு எப்போதும் வட இந்திய உணவுகள் என்றால் ஒரு தனிப்பட்ட விருப்பம் இருந்து வருகிறது. அந்த அளவிற்கு அந்த உணவின் ருசியும் மிகவும் வித்தியாசமனதாக இருக்கின்றன. பிரபல வட இந்திய உணவுகளில் ஒன்று தான் தஹி பன்னீர் எனும் தயிர் பன்னீர்
தமிழக மக்களுக்கு எப்போதும் வட இந்திய உணவுகள் என்றால் ஒரு தனிப்பட்ட விருப்பம் இருந்து வருகிறது. அந்த அளவிற்கு அந்த உணவின் ருசியும் மிகவும் வித்தியாசமனதாக இருக்கின்றன. பிரபல வட இந்திய உணவுகளில் ஒன்று தான் தஹி பன்னீர் எனும் தயிர் பன்னீர், இது சப்பாத்தி, பரோட்டா மற்றும் தோசை போன்ற உணவுகளுக்கு மிகச்சிறந்த தேர்வாக அமையும். சுவையான தயிர் பன்னீரை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
அரை கிலோ பன்னீர்
அரை லிட்டர் கெட்டியான தயிர்.
2 பெரிய வெங்காயம்
4 பச்சை மிளகாய்
1 டீஸ்பூன் உப்பு
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
2 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
2 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி
2 டீஸ்பூன் நெய்
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
1 டீஸ்பூன் சீரக தூள்
2 டீஸ்பூன் தூள்
2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
1 டீஸ்பூன் சீரகம்
பிரியாணி இலை
1 டீஸ்பூன் பூண்டு விழுது
1 டீஸ்பூன் இஞ்சி விழுது
1 கப் தண்ணீர்
அரை கப் முந்திரி
கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில் பன்னீரை துண்டுகளாக வெட்டி அவற்றுடன் உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் கஸ்தூரி மேத்தி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் இந்த கலவையை 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் தயிர் கலவை செய்வதற்கு ஒரு அகன்ற பாத்திரத்தில் முதலில் தயிர் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து அனைத்தையும் நன்கு கலக்கி எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் நெய் ஊற்றி சூடாக்கவும். நெய் சூடாகி உருகிய பின்னர் முன்னதாக ஊறவைத்து எடுத்த பன்னீர் கலவையை சேர்த்து நன்கு வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
பின்னர் ஒரு அகன்ற கடாயை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் சீரகம், பிரியாணி இலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து, நல்ல பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் இதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு தயிர் கலவையை சேர்த்து அடுப்பை அணைக்கவும். தயிர் கலவையை நன்றாக கிளறி விடவும். மீண்டும் அடுப்பை பற்ற வைத்து, தயிர் கலவையை 5 நிமிடங்கள் தொடர்ந்து கிளறவும். தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். கடாயை மூடி மேலும் 5 நிமிடங்கள் சமைக்கவும். முந்திரி விழுதை சேர்க்கவும். குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் வறுத்த பன்னீர் துண்டுகளை சேர்க்கவும். பச்சை மிளகாயை கீறி சேர்க்க வேண்டும். பின்னர் கடாயை மூடி வேக விடவும். கஸ்தூரி மேத்தி மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து ஒன்றாக கலக்கவும். சுவையான தஹி பன்னீர் பரிமாற தயாராக உள்ளது.
டாபிக்ஸ்