சாஃப்ட் ஆன க்ரிஸ்பி ஆன பிரெஞ்சு பிரைஸ்! சட்டுனு செய்யலாம்! ஈசியான ரெசிபி இதோ!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சாஃப்ட் ஆன க்ரிஸ்பி ஆன பிரெஞ்சு பிரைஸ்! சட்டுனு செய்யலாம்! ஈசியான ரெசிபி இதோ!

சாஃப்ட் ஆன க்ரிஸ்பி ஆன பிரெஞ்சு பிரைஸ்! சட்டுனு செய்யலாம்! ஈசியான ரெசிபி இதோ!

Suguna Devi P HT Tamil
Oct 23, 2024 02:52 PM IST

உருளைக்கிழங்கில் செய்யப்படும் சுவையான உணவுகளில் ஒன்று தான் பிரெஞ்சு பிரைஸ். இதன் மிருதுவான மற்றும் க்ரிஸ்பி தன்மை சுவையை கூட்டுகிறது.

சாஃப்ட் & க்ரிஸ்பி பிரெஞ்சு பிரைஸ்! சட்டுனு செய்யலாம்! ஈசியான ரெசிபி இதோ!
சாஃப்ட் & க்ரிஸ்பி பிரெஞ்சு பிரைஸ்! சட்டுனு செய்யலாம்! ஈசியான ரெசிபி இதோ!

தேவையான பொருட்கள் 

1/2 கிலோ பெரிய சைஸ் உருளைக்கிழங்கு

பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் 

தேவையான அளவு உப்பு 

1  டீஸ்பூன் மிளகு தூள்

செய்முறை 

முதலில் உருளைக்கிழங்கை நன்றாக கழுவி தோல் சீவி அதை நீளவாக்கில் ஃப்ரெஞ்ச் ஃப்ரை செய்வதற்கு ஏற்ப நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு பதினைந்திலிருந்து இருபது நிமிடம் ஊற வைக்கவும். இவ்வாறு தண்ணீரில் போட்டு வைப்பதால் உருளைக்கிழங்கின் வெளியில் உள்ள ஸ்டார்ச் தண்ணீரில் இறங்கி விடும். பொரிக்கும் போது மொரு மொறுப்பாக வரும். நன்றாக ஊறிய பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதை சுட வைக்கவும். பின்பு ஒரு மேஜைக்கரண்டி உப்பை அதில் சேர்த்து கொள்ள வேண்டும். இப்பொழுது தண்ணீரில் ஊறிக் கொண்டிருக்கும் உருளைக்கிழங்கு துண்டுகளை எடுத்து இதில் போடவும்.

சுமார் பத்து நிமிடங்கள் வரை அப்படியே வைக்கவும். இவ்வாறு செய்வதால் உருளைக்கிழங்கு பொரிக்கும் போது உள்ளே மிருதுவாகவும் வெளியே மொறு மொறுப்பாகவும் இருக்கும். பத்து நிமிடங்களுக்குப் பிறகு சுடு தண்ணீரில் இருந்து உருளைக்கிழங்கை எடுத்து ஒரு துணியை விரித்து உருளைக்கிழங்கை பரப்பி அதில் இருக்கும் ஈரத்தை துடைத்து கொள்ளவும். ஏனென்றால் தண்ணீருடன் உருளைக்கிழங்கை எண்ணெயில் போட கூடாது. பிரெஞ்ச் ஃப்ரை செய்வதற்கு உருளைக்கிழங்கை இரண்டு முறை பொரிக்க வேண்டும்.

முதலில் மிதமான தீயில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி உருளைகிழங்கை அதில் போட்டு நான்கிலிருந்து ஐந்து நிமிடங்கள் பொரித்துக் கொள்ளவும். நான்கைந்து நிமிடங்களுக்கு பிறகு உருளைக்கிழங்கை எடுத்து ஒரு தட்டில் போட்டு எண்ணெயை வடிய விடவும். இப்பொழுது உருளைகிழங்கு வெண்மை நிறமாக தான் இருக்கும். இரண்டாம் கட்டமாக பொரிக்கும் போது தான் உருளைக்கிழங்கை பொன்னிறமாக எடுக்க வேண்டும். அடுத்து இரண்டாம் கட்டமாக எண்ணெயை நன்றாக சுட வைத்து அதில் உருளைக்கிழங்கை போடவும். இம்முறை பொன்னிறமாகும் அளவிற்கு பொரித்து எடுத்துக் கொள்ளவும். அதை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது அளவு உப்பு மற்றும் ஒரு சிட்டிகை மிளகுத்தூள் தூவி கிளறி கொள்ளவும்.

இப்பொழுது ரெஸ்டாரன்ட் களில் கிடைக்கும் பிரெஞ்ச் ஃப்ரை களைப் போன்றே சூடான மொறு மொறுப்பான பிரெஞ்சு ப்ரைஸ் தயார். இதை வீட்டில் செய்து உண்டு மகிழுங்கள். வீட்டிலேயே சுத்தமான எண்ணெயில் இதனை செய்வதன் மூலம் நன்மை கிடைக்கிறது. எண்ணெயில் பொரிக்கப்படும் உணவுகளை சாப்பிடும் போது அதிக கொழுப்பு உடலில் சேர்க்கிறது. குறிப்பாக கடைகளில் மீண்டும் மீண்டும் ஒரே எண்ணெயை உபயோகப்படுத்தும் போது இது உடல் நாளாக கோளாறுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. வீட்டிலேயே இந்த பிரெஞ்சு பிரைஸ் செய்து தரும் போது குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.