Corn Vadai: அருமையான மக்காச்சோள வடை செய்வது எப்படி? ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்யுறது ரொம்ப ஈசிதான்! பக்காவான ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Corn Vadai: அருமையான மக்காச்சோள வடை செய்வது எப்படி? ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்யுறது ரொம்ப ஈசிதான்! பக்காவான ரெசிபி!

Corn Vadai: அருமையான மக்காச்சோள வடை செய்வது எப்படி? ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்யுறது ரொம்ப ஈசிதான்! பக்காவான ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Jan 10, 2025 07:45 PM IST

Corn Vadai: மாலை நேரத்தில் அனைவரும் சாப்பிட சத்தான ஒரு ஸ்நாக்ஸ் என்னவென்றால் மக்காச்சோள வடைதான். பல சத்துக்களை கொண்ட மக்காச்சோளத்தை வைத்து மொறுமொறுப்பான வடையை இனி வீட்டிலேயே செய்யலாம். இதனை செய்யும் எளிமையான முறையை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

Corn Vadai: அருமையான மக்காச்சோள வடை செய்வது எப்படி? ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்யுறது ரொம்ப ஈசிதான்! பக்காவான ரெசிபி!
Corn Vadai: அருமையான மக்காச்சோள வடை செய்வது எப்படி? ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்யுறது ரொம்ப ஈசிதான்! பக்காவான ரெசிபி! (Swasthis Kitchen)

 சில சமயங்களில் கடைகளில் செய்யப்படும் உணவுப் பொருள்கள் மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தப்படும் எண்ணெய்களாலும் சுத்தமில்லாத பொருட்களாலும் செய்யப்பட்டு இருக்கலாம். எனவே வீட்டிலேயே சுத்தமான உணவுகளை செய்து தருவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். மாலை நேரத்தில் அனைவரும் சாப்பிட சத்தான ஒரு ஸ்நாக்ஸ் என்னவென்றால் மக்காச்சோள வடைதான். பல சத்துக்களை கொண்ட மக்காச்சோளத்தை வைத்து மொறுமொறுப்பான வடையை இனி வீட்டிலேயே செய்யலாம். இதனை செய்யும் எளிமையான முறையை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் 

ஒரு பெரிய மக்காச்சோளம் 

1 கப் கடலை பருப்பு 

ஒரு பெரிய வெங்காயம் 

ஒரு டீஸ்பூன் சோம்பு 

ஒரு டீஸ்பூன் சீரகம்

2 வற மிளகாய் 

ஒரு துண்டு பட்டை 

2 பச்சை மிளகாய் 

சிறிதளவு துண்டு இஞ்சி 

4 பல் பூண்டு 

சிறிதளவு கறிவேப்பிலை 

சிறிதளவு கொத்தமல்லி தழை 

செய்முறை 

முதலில் மக்காச்சோளத்தை ஒரு இட்லி சட்டியில் வைத்து வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த மக்காச்சோள விதைகளை தனியாக உரித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது வடை செய்வதற்காக ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு வற மிளகாய், சீரகம், சோம்பு மற்றும் பட்டை துண்டு ஆகியவற்றை சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் 2 மணி நேரம் ஊற வைத்த கடலைப்பருப்பு மற்றும் வேகவைத்து உரித்து வைத்திருக்கும் மக்காச்சோள விதைகளை ஒன்றாக ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் போட்டு சற்று மொறுமொறுப்பான பதத்தில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் இதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலக்க வேண்டும். மேலும் இதில் அரை கப் அளவுள்ள கடலைப்பருப்பு, அரைத்து வைத்திருக்கும் மசாலா ஆகிய எல்லாவற்றையு போட வேண்டும். பின்னர் இதில் சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, புதினா மாற்று இஞ்சி பூண்டு விழுது ஆகிய அனைத்தையும் சேர்க்க வேண்டும்.  இந்த மாவை கலக்க சிறிதளவு தண்ணீர் ஊற்றினால் போதுமானதாக இருக்கும். அதிக அளவு தண்ணீர் ஊற்றக்கூடாது வடை மாவு பதத்திற்கு வந்தவுடன் சிறிதளவு அரிசி மாவு மற்றும் கடலை மாவையும் சேர்க்க வேண்டும். பின்னர் இந்த மாவு கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும். மேலும் இதனை ஒரு இலை அல்லது ஒரு பட்டர் பேப்பரில் வைத்து வடையாக தட்டி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து வடை சுடுவதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பின்னர் தட்டி வைத்த வடையை போட்டு அனைத்து பக்கங்களும் நன்றாக வெந்து வரும் வரை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். சுவையான மொறுமொறுப்பான மக்காச்சோள வடை ரெடி.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.