காலை நேர சப்பாட்டிற்கு சுவையான மற்றும் ஹெல்த்தியான ஒரு உணவு தேடுகிறீர்களா? இங்க இருக்கு அசத்தலான ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  காலை நேர சப்பாட்டிற்கு சுவையான மற்றும் ஹெல்த்தியான ஒரு உணவு தேடுகிறீர்களா? இங்க இருக்கு அசத்தலான ரெசிபி!

காலை நேர சப்பாட்டிற்கு சுவையான மற்றும் ஹெல்த்தியான ஒரு உணவு தேடுகிறீர்களா? இங்க இருக்கு அசத்தலான ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Updated Jun 02, 2025 12:02 PM IST

காலை உணவு தான் அந்த நாளுக்கான முழு ஆற்றலையும் வழங்குகிறது. எனவே காலை உணவு மிகவும் சரியான உணவாக இருக்க வேண்டும். அதற்கு ஒரு உணவை தேடுகிறீர்கள் என்றால் இந்த சோள உப்புமா சரியான தேர்வாக இருக்கும். இங்கே செய்முறையை தெரிந்துக் கொள்ளுங்கள்.

காலை நேர சப்பாட்டிற்கு சுவையான மற்றும் ஹெல்த்தியான ஒரு உணவு தேடுகிறீர்களா? இங்க இருக்கு அசத்தலான ரெசிபி!
காலை நேர சப்பாட்டிற்கு சுவையான மற்றும் ஹெல்த்தியான ஒரு உணவு தேடுகிறீர்களா? இங்க இருக்கு அசத்தலான ரெசிபி!

தேவையான பொருட்கள்

1 கப் வெள்ளை சோளம்

எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி

கடலை பருப்பு - 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

வேர்க்கடலை - 2 மேசைக்கரண்டி

சிவப்பு மிளகாய் - 5

பெருங்காயத்தூள்

வெங்காயம் - 1 நறுக்கியது

பச்சை மிளகாய் - 3 நறுக்கியது

பீன்ஸ் - 10 நறுக்கியது

கேரட் - 1 நறுக்கியது

பச்சை பட்டாணி - 1/2 கப் வேகவைத்தது

உப்பு - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை

எலுமிச்சைபழச்சாறு - 1/2 பழம்

துருவிய தேங்காய்

கொத்தமல்லி இலை நறுக்கியது

செய்முறை

முதலில் சோளத்தை எடுத்து நன்கு கழுவி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பத்து மணி நேரம் ஊற வைக்கவும். பத்து மணி நேரம் கழித்து குக்கரில் ஊற வைத்த சோளத்தை போட்டு ஆறு விசில் வரும் வரை வேகவிடவும். ஆறு விசில் வந்ததும், அடுப்பை அணைத்து அழுத்தத்தை விட்டு, மூடியை நீக்கி, சோளத்தை வடிகட்டவும். பிறகு கடாயில் எண்ணெய், கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து லேசாக வறுக்கவும். பிறகு வேர்க்கடலை, சிவப்பு மிளகாய் மற்றும் சிறிது பெருங்காயத்தூள் சேர்க்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பீன்ஸ், நறுக்கிய கேரட் சேர்த்து வதக்கவும்.

ஐந்து நிமிடம் கழித்து வேகவைத்த பச்சை பட்டாணி , உப்பு, மஞ்சள் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். பிறகு வேகவைத்த சோளத்தை சேர்த்து நன்கு கலக்கவும். ஐந்து நிமிடம் கழித்து அரை எலுமிச்சைபழச்சாறு, துருவிய தேங்காய், சிறிது நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் மிகவும் சுவையான சோள உப்மா தயார்.