இரும்பு சத்தை அதிகரிக்க! மக்காச்சோள ப்ரை செஞ்சு சாப்பிடுங்க! இதோ ஈசி ரெசிபி!
மக்காச்சோளம் உடலுக்குத் தேவையான இரும்பு சத்தையும் அளிக்கிறது. இந்த மக்காச்சோளத்தை வைத்து சுவையான ப்ரை செய்யலாம். இதனை செய்யும் எளிமையான முறையை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
மக்காச்சோளத்தில் பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீஸ், துத்தநாகம், இரும்புச்சத்து, செம்புச் சத்து போன்ற பல வகையான உடலுக்கு அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்திருக்கின்றன. இவை உடலுக்குத் தேவையான இரும்பு சத்தையும் அளிக்கிறது. இந்த மக்காச்சோளத்தை வைத்து சுவையான ப்ரை செய்யலாம். இதனை செய்யும் எளிமையான முறையை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
2 பெரிய மக்காச்சோளம்
4 டேபிள்ஸ்பூன் சோள மாவு
4 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு
1 கப் மயோனீஸ்
3 டேபிள்ஸ்பூன் ஸ்செஷ்வான் சாஸ்
சிறிதளவு கருப்பு மிளகு தூள்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு எண்ணெய்
சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன்
செய்முறை
முதலில் சோள விதைகளை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி சோள விதைகளை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இதில் சிறிதளவு உப்பு சேர்க்க வேண்டும். பின்னர் தண்ணீரை வடித்து ஆற வைக்க வேண்டும். இது ஆறிய பின்னர் இதனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் கருப்பு மிளகு தூள் மற்றும் தேவையான அளவு உப்பை தூவி கலந்து விட வேண்டும். பின்பு அதில் சோள மாவு மற்றும் அரிசி மாவை போட்டு அதை நன்கு கலந்து விட்டு பின்பு அதில் தண்ணீர் ஊற்றி கிளறவும். பின்னர் இதனை ஃபிரிட்ஜில் 20 நிமிடம் வரை வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு கிண்ணத்தில் ஒரு கப் அளவுள்ள மயோனீஸ், ஸ்செஷ்வான் சாஸை ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு வைத்து கொள்ளவும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும், அதில் ஃபிரிட்ஜில் வைத்திருந்த சோள விதைகளை எடுத்து போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுததுக் கொள்ள வேண்டும். அது நன்கு பொன்னிறமானதும் அதை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். இவ்வாறு மீதமுள்ள சோள விதைகளையும் எண்ணெய்யில் பக்குவமாக போட்டு பொரித்து எடுத்து தட்டில் வைத்து கொள்ளவும். அனைத்து சோள விதைகளையும் பொரித்து எடுத்து தட்டில் வைத்த பிறகு அதில் மயோனைஸ் மற்றும் ஸ்செஷ்வான் சாஸை மேலே ஊற்றி சிறிதளவு ஸ்பிரிங் ஆனியனை தூவி அதை சுட சுட பரிமாறவும்.
மக்காச்சோளத்தின் நன்மைகள்
சோளத்தில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் உணவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது, செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது. தொடர்ந்து உட்கொள்வது வயது தொடர்பான மாகுலர் சிதைவு அபாயத்தைக் குறைக்கும்.
சோளம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது மற்றும் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாக உள்ளது. சோளம் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது; இது ஆரோக்கியமான கொலஸ்ட்ராலை பராமரிக்க உதவுகிறது மற்றும் இருதய பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்கிறது. இதில் ஆரோக்கியமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன; ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை ஆதரிப்பதில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த கலவைகள் ஃப்ரீ ரேடிக்கல் மாற்றத்திற்கு எதிராக போராட உதவுகின்றன. இதயம் தொடர்பான நோய்களைக் குறைக்கிறது.
டாபிக்ஸ்