இனிப்பான இளநீர் பாயசம் செய்வது எப்படி? இனி நீங்களும் செய்யலாம்! ஈசி ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  இனிப்பான இளநீர் பாயசம் செய்வது எப்படி? இனி நீங்களும் செய்யலாம்! ஈசி ரெசிபி!

இனிப்பான இளநீர் பாயசம் செய்வது எப்படி? இனி நீங்களும் செய்யலாம்! ஈசி ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Dec 11, 2024 05:24 PM IST

மற்ற இனிப்பு உணவுகளை விட மிகவும் சுவையானதாக இருக்கும். ஏனென்றால் இயற்கையாகவே தித்திப்பான இளநீர் இதில் இருப்பதனால் இதன் சுவை மேன்மேலும் கூடுகிறது. இந்த இளநீர் பாயசத்தை உங்கள் வீட்டிலேயே எளிமையாக செய்யும் முறையை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

இனிப்பான இளநீர் பாயசம் செய்வது எப்படி? இனி நீங்களும் செய்யலாம்! ஈசி ரெசிபி!
இனிப்பான இளநீர் பாயசம் செய்வது எப்படி? இனி நீங்களும் செய்யலாம்! ஈசி ரெசிபி!

தேவையான பொருட்கள்

2 இளநீர்

அரை லிட்டர் பால்

கால் கிலோ சர்க்கரை

1 கப் மில்க்மெய்ட்

4 டீஸ்பூன் சாரை பருப்பு

8 முதல்10 முந்திரி

8 முதல் 10 பாதாம்

8 முதல்10 பிஸ்தா

சிறிதளவு ஏலக்காய் தூள்

 பச்சை கற்பூரம்

தேவையான அளவு நெய்

செய்முறை

முதலில் இளநீரில் உள்ல வழுக்கையை சிறு சிறு துண்டுகளாக்கி அதில் பாதியை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் மீதமுள்ள இளநீர் தண்ணீரையும் ஊற்றி அதை மீண்டும் ஒரு முறை நன்கு அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும். இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றி அதை நன்கு சுட வைக்கவும். பால் நன்கு காய்ந்தவுடன் அதில் மில்க்மெய்டை ஊற்றி அது நன்கு கரையும் வரை ஒரு கரண்டியின் மூலம் அதை கலந்து விட வேண்டும். அடுத்து அதில் சர்க்கரையை சேர்த்து அது கரையும் வரை அதை நன்கு கிளற வேண்டும். பின்பு அதில் ஏலக்காய் தூள் மற்றும் பச்சை கற்பூரத்தை சேர்த்து மீண்டும் கிளறவும். 

பிறகு அதில் சாரை பருப்பு மற்றும் நறுக்கிய வழுக்கையை போட்டு அதை நன்கு கலந்து விட்டு  கொதிக்கவும் அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து நன்கு ஆற விடவும். அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடாக்க வேண்டும். நெய் சூடான பின்னர் அதில்  முந்திரியை போட்டு அதை வறுத்து எடுத்து தனியாக வைத்து கொள்ள வேண்டும். பின்பு  ஆற வைத்திருக்கும் பாலில் அரைத்து வைத்திருக்கும் இளநீர் வழுக்கை வறுத்த முந்திரியை சேர்த்து அதை நன்கு கலந்து விட வேண்டும். இதனை பால் சூடாக இருக்கும் போது அரைத்த இளநீர் வழுக்கை அதில் சேர்த்தால் அது திரிந்து விடும். எனவே பால் சூடாக இருக்கும் போது இதில் சேர்க்க கூடாது.  அடுத்து இந்த இளநீர் பாயாசத்தை ஃபிரிட்ஜில் சுமார் 2 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரம் வரை வைக்கவும். 2 மணி நேரத்திற்கு பிறகு அதை ஃபிரிட்ஜில்லிருந்து எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றி அதன் மேலே நறுக்கி வைத்திருக்கும் பாதாம் துண்டுகளை தூவி அதை சில்லென்று பரிமாறவும். இப்பொழுது உங்கள் சுவையான மற்றும் ஜில்லென்று இருக்கும் இளநீர் பாயாசம் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.